டப்பிங் பேச தாமதிக்கும் நடிகர் அஜித் குமார்-'துணிவு' படத்துக்கு சிக்கல்

டப்பிங் பேச தாமதிக்கும் நடிகர் அஜித் குமார்-துணிவு படத்துக்கு சிக்கல்
X

துணிவு படத்தின் போஸ்டர் காட்சி.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'துணிவு' படத்திற்கு அஜித் டப்பிங் பேச தாமதிப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 2023 பொங்கல் திருநாளில் வெள்ளித் திரையில் வெளியாகப் போகும் படங்கள் எவையெவை என்கிற ஒரு உத்தேசமான பட்டியல் ஒருபுறம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து வரும் 'துணிவு' திரைப்படமும் நடிகர் விஜய் நாயகனாக நடித்து வரும் 'வாரிசு' திரைப்படமும் 'தல' மற்றும் 'தளபதி' ரசிகர்களிடையே ஆர்வத்தைத் அதிகரிக்க வைத்துள்ளது.

இந்தநிலையில், பொங்கல் திருநாளின் வெளியீட்டுப் போட்டியில் களமிறக்கப்பட உள்ள நடிகர் அஜித் குமாரின் 'துணிவு' திரைப் படத்தின் டப்பிங் பணிகள் சுறுசுறுப்பாகத் தொடங்கப்பட்டுள்ளதாக விறுவிறு செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளது. ஜி தமிழ் தொலைக்காட்சி நிறுவனம்தான் 'துணிவு' திரைப் படத்தின் முதலீட்டுத் தயாரிப்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் தயாரிக்கும் படங்களின் தொலைக்காட்சி உரிமையை வேறு யாருக்கும் அவர்கள் விற்பதில்லை என்பதுதான் அந் நிறுவனத்தின் நடைமுறை ஆகும். ஆனால், 'துணிவு' திரைப் படத்தின் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமையை கைப்பற்ற கடும் போட்டி என ஊடகங்களில் செய்திகள் வெளியானால் அது இந்தாண்டின் தலைசிறந்த காமெடி எனலாம்.

உண்மையில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகும் கதைக் களத்தினைக் கொண்டதுதான் 'துணிவு' திரைப்படத்தின் கதை ஆகும். இத் திரைப்படத்தை நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து வெளியான 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.

'துணிவு' திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார், இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் ஏற்றிருப்பது படத்தின் நாயகன் மற்றும் வில்லன் கதாபாத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்போதைக்கு இசையமைப்பை ஜிப்ரான் ஏற்றுள்ளார். இப்படத்தில் ஜிப்ரான் இசையில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலைப் பாடியுள்ளார். விரைவில் 'துணிவு' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்புத் தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இந்தநிலையில், படத்தின் நாயகியாக நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியர் அவரது டப்பிங்கைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத் தளங்களில் தற்போது வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் எப்போது இப்படத்துக்கான அவரது டப்பிங்கை பேசத் தொடங்குவார் என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.


இப்படம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, ஏற்கெனவே தயாரிப்புத் தரப்புக்கும் நடிகர் அஜித் குமார் தரப்புக்கும் கருத்து வேறுபாடும் சின்ன சின்ன உரசல்களும் ஏற்பட்டு வருகின்றது. ஆனாலும், அவற்றை எல்லாம் கடந்து ஒருவாறாக, 'துணிவு' திரைப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதனிடையே நடிகர் அஜித் குமாருக்கு சேர வேண்டிய சம்பளத் தொகை முழுவதுமாக இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றும் நடிகர் அஜித் குமார் தரப்பில் இருந்து குரல் ஒலிக்கிறது.

திரைப் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே, முழு சம்பளத்தையும் வாங்கிவிடுவது நடிகர் அஜித் குமாரின் வழக்கம். அவ்வாறு செட்டில் செய்யவில்லை என்றால், டப்பிங் பேச அவர் வர மாட்டார் என்பது திரையுலகினர் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இத் திரைப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அஜித் பைக் சுற்றுப் பயணம் சென்று விட்டார். இந்தநிலையில், படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது.

ஆனால், அஜித் குமாருக்கான சம்பளம் எப்போது கொடுப்பது... அவர் எப்போது வந்து டப்பிங் வேலையை முடித்துக் கொடுப்பார் என்பது இதுவரை உறுதியாகவில்லை. ஆயினும், நடிகர் அஜித் குமாரிடம் பேசி அவரை சமாதானப்படுத்தி, டப்பிங்கை பேச வைத்திடவும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!