நடிகர் அஜித்குமாரின் 'துணிவு' - செகண்ட் லுக் போஸ்டர்..!

நடிகர் அஜித்குமாரின் துணிவு - செகண்ட் லுக் போஸ்டர்..!
X

பைல் படம்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் 'துணிவு' படத்தின் செகண்ட் லுக் வெளியானது.

நடிகர் அஜித்குமார் நடித்து வரும் படத்துக்கு 'துணிவு' என்ற பெயர் சூட்டி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (21/09/2022) வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று (22/09/2022) வெளியாகியுள்ளது. 'துணிவு' படத்தில் நடிகர் அஜித்குமாருடன் நாயகியாக நடிப்பவர் நடிகை மஞ்சு வாரியார். ஜிப்ரான் இசையில் உருவாகும் இப்படம், 1985-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற, வங்கிக் கொள்ளையின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கதை பின்னப்பட்டிருக்கிறது.

நடிகர் அஜித்குமார், இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம்தான் 'துணிவு'. ஏற்கெனவே, உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குநர் ஹெச்.வினோத் என்பதால் 'துணிவு' படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏராளமாக உள்ளது.

Tags

Next Story
scope of ai in future