கார் ரேஸ், பைக் ரேசை தொடர்ந்து பைலட்டாகிறார் நடிகர் அஜித்குமார்

கார் ரேஸ், பைக் ரேசை தொடர்ந்து பைலட்டாகிறார் நடிகர் அஜித்குமார்
X

ஹெலிகாப்டர் இயக்கும் நடிகர் அஜித்குமார்.

Ajith Kumar Racer -கார் ரேஸ், பைக் ரேசை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் பைலட் ஆக மாறியவது பற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Ajith Kumar Racer -தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிகராக மட்டுமின்றி, புகைப்படம், ட்ரோன்கள், துப்பாக்கி சுடுதல், பைக் ரைடிங், கார் ரேஸ் என ஆர்வம் காட்டி வரும் அவர் தற்போது புதிய முயற்சியிலும் இறங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தற்போது வினோத் இயக்கத்தில், அஜித்61 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு இடைவெளி விடப்பட்டுள்ளதால், அஜித்குமார் தன் சக நடிகர்களுடன் இணைந்து வட மாநிலத்தில் பைக்கில் பயணம் சென்று வருகிறார்.


சமீபத்தில் மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் அஜித்துடன் பைக் பயணம் சென்றபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், அஜித்குமார், ஹெலிகாப்டர் இயக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. எனவே, அஜித்குமார் விரைவில் பைலட் லைசென்ஸ் எடுத்தாலும் எடுக்கலாம் எனவும் புதிய முயற்சிகளில் ஈடுபடும் அஜித்திற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பாரியூர் குண்டம் விழா குறித்து ஆலோசனை..!