நடிகர் அஜித்தின் 'துணிவு'..!

AK 61 Update | Ajith Tamil Actor
X

துணிவு பட போஸ்டர் (பைல் படம்) 

AK 61 Update -நடிகர் அஜித் நடிப்பில் இதுவரை 'ஏகே61' எனும் தற்காலிகத் தலைப்பில் வளர்ந்து வந்த படம் 'துணிவு' என்கிற நிஜப்பெயருடன் போஸ்டர் வெளியானது.

AK 61 Update -நடிகர் அஜித்குமார் நடித்து வரும் அவரது 61-வது படத்துக்கு பல்வேறு தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டது. தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டது. இந்நிலையில்தான், ஏகே61 என இதுவரை அழைக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (21/09/2022) மாலை 6.30 மணிக்கு அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

'துணிவு' என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டதும் அதுதான் தற்போது இணையத்தில் பெரிய ட்ரெண்ட். 'துணிவு' படம், ஹெச். வினோத் மற்றும் அஜித் கூட்டணி சேரும் மூன்றாவது படமாகும். 'துணிவு' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் டிசைன் இந்திய ரூபாய் நோட்டில் இருக்கும் டிசைன்தான். போஸ்டரின் டாப்பில் 2000 ருபாய் நோட்டின் பிங்க் நிறம் சற்று இருக்கிறது. அதனால் மொத்த கதையும் ஒரு மிகப்பெரிய தொகைப் பணத்தை கொள்ளையடிப்பது பற்றியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. No guts No Glory என டேக் லைன் அதை கிட்டத்தட்ட உறுதி செய்கிறது. ஆனாலும், படம் வெளியான பிறகுதான் நிதர்சனம் தெரியும்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு