மிகவும் மோசமான வசூலில் அமீர்கானின் லால்சிங்?

மிகவும் மோசமான வசூலில் அமீர்கானின் லால்சிங்?
X

பைல் படம்.

Aamir Khan-அமீர்கானின் லால்சிங் அதிகபட்சமாக ரூ. 60 கோடியுடன் படத்தின் வசூல் முடிந்துவிடும் என கூறப்படுகிறது.

Aamir Khan-அமீர்கான் பாலிவுட் சினிமா கொண்டாடும் ஒரு மிகச் சிறந்த நடிகர். இவரது படங்கள் பல பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகள் படைத்துள்ளன. தங்கல் திரைப்படம் இந்தியாவிலேயே அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்டில் டாப்பில் இருந்தது.

சிறந்த நடிகரான அமீர்கானின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் லால் சிங் சத்தா. பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இத்திரைப்படம் கடந்த 5 நாட்களுக்கு முன் வெளியாகி இருந்தது. இதில் ஏராளமான நடிகர்கள் இருந்தும் சரியான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெறவில்லை.

ரூ. 180 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வெளியானது. இருப்பினும் எதிர்பார்த்த அளவிற்கு படத்தின் வசூல் இல்லை என கூறப்படுகிறது. மேலும் அதிகபட்சமாக ரூ. 60 கோடியுடன் படத்தின் வசூல் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மட்டுமே படம் ரூ. 2 கோடி வரைக்கு தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!