ஆதார் படத்தின் டிரைலர்&ஆடியோ லாஞ்ச் இன்னிக்கு ஈவ்னிங் நடக்கப் போகுது

ஆதார் படத்தின் டிரைலர்&ஆடியோ லாஞ்ச் இன்னிக்கு ஈவ்னிங் நடக்கப் போகுது
X
அம்பாசமுத்திரம்அம்பானி, திருநாள் படங்களை தொடர்ந்து ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய படம் ஆதார்

'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய படம் 'ஆதார்'. இதில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், 'காலா' புகழ் திலீபன், 'பாகுபலி' புகழ் பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா. உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்காய்ங்க.

மகேஷ் முத்துசாமி ஒளிப் பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். பாடல்களை கவிஞர் யுரேகா எழுத, 'அசுரன்' புகழ் ராமர் படத்தை தொகுத்திருக்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குநரான சீனு படத்தின் கலை இயக்கத்தை கவனிச்சிருகார். 'ஆதார்' படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் பிரம்மாண் டமான பொருட்செலவில் தயாரிச்சிருக்கார்.


படத்தைப் பற்றி டைரக்டர் "எளிய மனிதர்களின் வலியை பேசும் யதார்த்த சினிமா வாக 'ஆதார்' உருவாகியி ருக்கிறது," அப்படீன்னு திருக்குறளை விட சுருக்கமாகச் சொல்லிபுட்டார்

இந்த படம் ரிலீஸாக தயாரான நிலையில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்னிக்கு ஈவ்னிங் வடபழனியில் ஒரு ஹோட்டலில் நடக்க இருக்குது.

Next Story