இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம்: ரஜினிகாந்த் பாராட்டு

இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம்: ரஜினிகாந்த் பாராட்டு
X

ரஜினி-வெற்றிமாறன்.

விடுதலை திரைப்படம் இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம் என படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான விடுதலை திரைப்படம் கடந்த 31ம் தேதி வெளியானது. இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், விடுதலை படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். அதோடு, இயக்குநர் வெற்றிமாறனையும், நடிகர் சூரியையும் நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.


விடுதலை படம் குறித்து நடிகர் ரஜினி, தன்னுடைய ட்விட்டர் பதிவில், “விடுதலை.. இதுவரை தமிழ்த்திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்! சூரியின் நடிப்பு- பிரமிப்பு. இளையராஜா- இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் – தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள்.

இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்” என நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?