ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய பிரபல தெலுங்கு சினிமா நடிகர்

ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய பிரபல தெலுங்கு சினிமா நடிகர்
X
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.
பிரபல தெலுங்கு சினிமா நடிகர் ஜூனியர் என்டிஆர் ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கியது பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது அங்கிருந்ததாக அவர் வெளியிட்ட பதிவுகள் வைரலாகி வருகின்றன.

ஜப்பானில் ஹொன்ஷு தீவுகள் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 12.40 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவாகியிருந்தது.

90 நிமிடங்களில் அடுத்துத்து 21 முறை நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்பட்டன. அண்மைக்காலங்களில் இது போன்ற ஒரு நிலநடுக்கத்தை ஜப்பான் பார்த்ததில்லை. ஜப்பானின் மேற்கு கரையையொட்டியுள்ள பகுதிகளில் அதிக தாக்கம் உணரப்பட்டது. ஹொகைடோ தீவுகள் முதல் நாகசாகி வரை நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.

இதனால் அந்த பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 1 முதல் 3 மீட்டர் உயரம் வரை, சில இடங்களில் 5 மீட்டர் உயரத்திற்கு கூட கடல் அலைகள் எழும் என எச்சரிக்கப்பட்டது. இதனால் மக்கள் உயரமான கட்டடங்களில் தஞ்சமடையுமாறு அறிவுறுத்தப்பட்டது. நிலநடுக்கத்தால் சாலைகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகிவிட்டனர். சேதாரங்கள் அதிகம் இருக்கின்றன.

இந்த நிலையில் சுனாமி எச்சரிக்கையும் திரும்ப பெறப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுத்த நிலையில் நிறைய இடங்களில் கடல் ஆக்ரோஷமாக இருந்தது. கடலோரம் வசிக்கும் இடங்களில் தண்ணீர் புகுந்தது. இந்த நிலையில் புத்தாண்டை கொண்டாட பிரபால தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தனது மனைவி லட்சுமி பிரணதி, குழந்தைகள் அபய், பார்கவ் ஆகியோருடன் ஜப்பான் சென்றிருந்தார்.

ஆஸ்கர் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்த ஜூனியர் என்.டி.ஆர், கடந்த ஒரு வாரமாக ஜப்பானில் இருந்து வந்தார். நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் அவர் ஜப்பானில் இருந்தது குறித்து தனது எக்ஸ் சமூகவலைதள பதிவில் ஜூனியர் என்.டி.ஆர் .குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் ஜப்பானில் இருந்து இன்று தான் வீடு திரும்பினேன். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்தேன். கடந்த வாரம் முழுவதும் ஜப்பானில்தான் இருந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் நிலநடுக்க பாதிப்புகளில் இருந்து மீண்டும் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். வலிமையாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

ஜூனியர் என்டிஆர் தேவரா எனும் படத்தில் பிஸியாக இருந்தார். ஜனவரி 8ஆம் தேதி அதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என உறுதியளித்தனர். தேவரா படத்தில் முதல் பாகம் ஏப்ரல் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் ஜான்வி கபூர், சைஃப் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!