புதுமனை புகுவிழாவில் ஏற்றி விட்ட ஏணியை மறக்காத கிராமிய பாடல் தம்பதியினர்

புதுமனை புகுவிழாவில் ஏற்றி விட்ட ஏணியை மறக்காத கிராமிய பாடல் தம்பதியினர்
X

தாங்கள் கட்டிய வீட்டு முன் கிராமிய பாடல் தம்பதியினர் செந்தில்- ராஜலட்சுமி.

Senthil Ganesh Rajalakshmi -புதுமனை புகுவிழாவில் ஏற்றி விட்ட ஏணியை மறக்காமல் செந்தில் -ராஜலட்சுமி கிராமிய பாடல் தம்பதியினர் மரியாதை செய்துள்ளனர்.

Senthil Ganesh Rajalakshmi -கிராமியப் பாடல்கள் மூலம் புதுக்கோட்டையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இசைக் கச்சேரிகள் நடத்தி வளர்ந்து பிரபலமடைந்த செந்தில் - ராஜலட்சுமி தம்பதியர் தங்களது அடுத்தகட்ட வளர்ச்சியாக விஜய் தொலைக் காட்சியின், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி மட்டுமின்றி உலகம் முழுவதும் அறிமுகமாகினர். தங்களது ஈர்க்கும் குரலால் இனிய கிராமியப் பாடல்களால் தங்களுக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றனர்.

மிகச் சாதாரணமான ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து கிராமிய இசை, மக்கள் இசை, திருவிழா கச்சேரி போன்ற இடங்களில் பாடி வந்த செந்தில் - ராஜலட்சுமிக்கு விஜய் டிவி சூப்பர் சிங்கர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பாட வாய்ப்புக் கிட்டியது அவர்களுக்கான மிகப்பெரிய வரம். கிடைத்த அந்த வாய்ப்பை சுதாகரித்துக் கொண்ட இருவரும் தங்களிடம் இருக்கும் ஒட்டு மொத்த திறமைகளையும் அந்த மேடையில் கொட்டி மொத்த உலகத் தமிழர்களின் இல்லங்களுக்குள் பிரபலமடைந்தனர். அத்துடன் போட்டியின் இறுதிச் சுற்றுவரை இருவரும் அடைந்து சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்றார் செந்தில் கணேஷ்.


அதன்பிறகு, செந்தில் - ராஜலட்சுமி இருவருக்குமே திரைப்பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. பல படங்களில் தொடர்ந்து பாடி அங்கும் தங்களுக்கென்று ஒரு தனித்த அடையாளத்தையும் புகழையும் பெறத் தொடங்கினர். இவர்களின் குரலில் வெளிவந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஆனாலும், இருவரும் தாங்கள் கடந்துவந்த… தங்களை இந்த உயரத்துக்கு கொண்டுவரக் காரணமான கிராமியப் பாடல்களை விடாமல் இன்னமும் அதில், தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், இத்தனை ஆண்டுகால உழைப்பின் வளர்ச்சியின் அடையாளமாக இருவரும் சேர்ந்து, புதுக்கோட்டையில் பிரமாண்டமாக ஒரு வீட்டைக் கட்டி முடித்துள்ளனர். இவர்களது வீட்டின் புதுமனை புகு விழா நிகழ்வை சிறப்பாக நடத்தினர். அதனைத் தொடர்ந்து இவர்களின் ஹோம் டூர் வீடியோவும் இணையத்தில் வைரலானது. வீடா? மாளிகையா? என கேட்கும் அளவுக்கு, அந்த வீட்டில் அத்தனை விஷயத்தையும் பார்த்துப் பார்த்து ரசித்து ரசித்து ரசனையின் மொத்த வெளிப்பாடாக செதுக்கியுள்ளனர் இருவரும்.


புதுமனை புகு விழா குறித்த, மேலுமொரு வீடியோவினை செந்தில் - ராஜலட்சுமி இருவரும் அண்மையில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவும் இணையத்தில் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கவனிக்கத்தக்க ஒன்றாக எல்லோரும் பேசப்படும் முக்கியத் தகவல் என்னவென்றால், செந்தில் - ராஜலட்சுமி இருவருமே தங்களது புது வீடு கட்டிய மகிழ்வையும் நிகழ்வில் தாங்கள் வெளிப்படுத்திய நன்றியும்தான்.

அது என்னவெனில், தங்களை புகழின் வெளிச்சத்துக்கு ஏற்றிவிட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இருவரும் மறக்கவில்லை என்பதன் அடையாளமாகவும் நன்றிப் பெருக்காகவும் அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ரவூஃபாவை அழைத்து அவர் கையால் குத்து விளக்கு ஏற்ற வைத்து இருவரும் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளனர். செந்தில் - ராஜலட்சுமியின் இந்த மரியாதை ரசிகர்களையும் அவர்களது அபிமானிகளையும் வியக்க வைத்தது. நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் செந்தில் - ராஜலட்சுமி இருவரையும் மனதாரப் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!