நாம ஜெயிச்சிட்டோம் மாறா! – 5 தேசிய விருதுகளை அசால்ட்டாக அள்ளிய 'சூரரைப் போற்று'

நாம ஜெயிச்சிட்டோம் மாறா! – 5 தேசிய விருதுகளை அசால்ட்டாக அள்ளிய சூரரைப் போற்று
X

Soorarai pottru movie bags 5 national awards - நாம ஜெயிச்சிட்டோம் மாறா! – 5 தேசிய விருதுகளை அசால்ட்டாக அள்ளிய ‘சூரரைப் போற்று’

Soorarai pottru movie bags 5 national awards - நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக இந்த தேசிய விருது அமைந்து உள்ளதாக, அவரது ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.

Soorarai pottru movie bags 5 national awards - இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான 'சூரரைப் போற்று' திரைப்படம், சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்று உள்ளது.

திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரைத்துறையினரை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் மத்திய அரசின் சார்பில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 68வது தேசிய விருதுகள், தலைநகர் புதுடில்லியில் அறிவிக்கப்பட்டன.

தமிழ் படங்கள் ஆதிக்கம்

தேசிய விருதுகள் பட்டியலில், இந்த ஆண்டு தமிழ் படங்கள் அதிக ஆதிக்கம் செலுத்தி உள்ளன.

Soorarai pottru movie bags 5 national awards - விருதுகளின் விபரங்கள்

சிறந்த படம் - சூரரைப் போற்று

சிறந்த நடிகர் – சூர்யா, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்

சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)

சிறந்த திரைக்கதை -சூரரைப் போற்று

சிறந்த இசையமைப்பாளர் – ஜி. வி. பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று)

சிறந்த வசனம் – மடோன் அஸ்வின் (மண்டேலா படம்)

சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது – மடோன் அஸ்வின் (மண்டேலா)

சிறந்த தமிழ் படம் – சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த துணை நடிகை – லட்சுமி பிரியா சந்திரமெளலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

சிறந்த படத்தொகுப்பு – சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த இயக்குனர் – இயக்குனர் சச்சி ( அய்யப்பனும் கோஷியும்- மலையாளம்)

சிறந்த துணை நடிகர் – பிஜூ மேனன்

சிறந்த பாடகி – அட்டப்பாடி நஞ்சம்மா ( அய்யப்பனும் கோஷியும்- மலையாளம்)

நாளை ( ஜூலை 23ஆம் தேதி) நடிகர் சூர்யா தனது பிறந்த நாளை கொண்டாட உள்ள நிலையில், சிறந்த நடிகர் மற்றும் தான் நடித்த சூரரைப் போற்று திரைப்படம், 5 தேசிய விருதுகள் வென்றுள்ள நிகழ்வு அவர் எப்போதும் மறக்க மாட்டார்.

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக இந்த தேசிய விருது அமைந்து உள்ளதாக, அவரது ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.

Soorarai pottru movie bags 5 national awards - விருது பெற்ற திரைநட்சத்திரங்களும், Instanews இணையதளம் உளங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!