'ஒப்பினியன் சொல்றது மட்டுமே வேலை' - விக்கிரமனை விளாசிய மைனா

ஒப்பினியன் சொல்றது மட்டுமே வேலை - விக்கிரமனை விளாசிய மைனா
X

30th December 2022, Promo01- பிக்பாஸ் வீட்டுக்குள் மைனா - விக்கிரமன் மோதல்.

30th December 2022, Promo01- ‘பிக்பாஸ் வீட்டுக்குள் ஒப்பினியன் சொல்வதை மட்டுமே, விக்கிரமன் வேலையாக வைத்திருக்கிறார்,’ என்று, மைனா குற்றம் சாட்டும் ப்ரோமோ வெளியாகி, வைரலாகி வருகிறது.

Bigg Boss Tamil Season 6, 30th December 2022, Promo01- பிக்பாஸ் சீசன்-6 ஆரம்பித்து தொடர்ந்து 78 நாட்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசன் மிகவும் போராக தான் உள்ளது என்பது ரசிகர்கள் மத்தியில் இருக்கும் பொதுவான கருத்து. தனலட்சுமி, மகேஸ்வரி போன்றோர் இருக்கும் வரை அவ்வப்போது, ஏதாவது ஒரு விதத்தில், வீட்டுக்குள் சண்டை வெடிக்கும். வாக்குவாதம் தொடரும். ஆனால், இப்போது அந்த வேலையை செய்யும் அசீம் மட்டுமே, பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார் என்பதால், ரசிகர்கள் ஏமாற்றத்தையே உணர்கின்றனர்.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் எப்பொழுதும் உண்டு. ஆனால் இந்த சீசனில் பல புதிய மாற்றங்களை செய்தும் பெரிதாக ரசிகர்களை கவரும் வகையில் இல்லை என்பது தான் உண்மை. பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு என்ன தான் புதிய டாஸ்க்குகளை கொடுத்தாலும், சரியாக விளையாடாமல் சண்டை மட்டும் தான் நடந்து வருகிறது.

பிக்பாஸ் குழுவினரும் பல வகையில் யோசித்து டாஸ்க் கொடுத்தாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இறுதியாக இந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பங்களை வீட்டிற்குள் அழைத்து வரும் பிரீஸ் டாஸ்கை கொடுத்து ரசிகர்களை கவர முடிவு செய்யப்பட்டு, அந்த டாஸ்க்கும் நிறைவடைந்தது.


இதில் மைனாவின் கணவர், மகன், சகோதரர், ஏடிகேவின் பெற்றோர், அமுதவாணனின் மனைவி, குழந்தைகள், அசீமின் சகோதரர், நண்பர், ஷிவினின் சகோதரி, தோழி, கதிரின் பெற்றோர், கதிரின் தோழி, விக்கிரமனின் பெற்றோர், ரக்‌சிதாவின் தாயார், மணிகண்டன் அவரது தாயார், மனைவி, மகன் மற்றும் அவரது சகோதரியான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர், பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து, போட்டியாளர்களை மகிழ்வித்தனர்.

இதில் மணிகண்டன் குடும்பத்தினர், ஏடிகே வின் தந்தை மற்றும் கதிரவனின் தாயார் ஆகியோர், வீட்டுக்குள் நடனமாடி அசத்தினர். ஆனால், விக்கிரமனின் பெற்றோர் அமைதியாக வந்து சென்றனர். மற்ற போட்டியாளர்கள் குறித்த தங்களது மதிப்பீடுகளை கூறினர்.


இந்நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 6ன் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில், லிவிங் ஏரியாவில் எல்லோரும் சோபாவில் வரிசையாக அமர்ந்திருக்க, எதிரே நின்றிருக்கும் மைனா, விக்கிரமனை பார்த்து சில கருத்துகளை சொல்ல, அதற்கு அவர், தட்டில் உள்ள உணவை சாப்பிட்டபடி பதிலளிக்கிறார்.

'ஒப்பினியன் என்பது, எல்லோருக்கும் வேண்டும்தான். ஒப்பினியன் சொல்லவே கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், ஒப்பினியன் சொல்வதையே வேலையாக வைத்திருக்க கூடாது. அந்த வேலையை நான் செய்யவில்லை. நான் இயல்பாக இருக்கிறேன்,' என்கிறார் மைனா.


அதற்கு பதிலளிக்கும் விக்கிரமன், 'எல்லோருமே கேம் விளையாட வந்திருக்கிறோம். சக பிளேயர்ஸ் விளையாடும்போது, அவர்களுக்கு 'டிஸ்டர்பன்ஸ்' ஏற்படும் போது, அதை நீங்கள் எந்த இடத்திலேயும் சுட்டிக்காட்டியோ அல்லது அவர்களுக்கு பக்கமாக நின்றோ, நான் பார்த்ததே இல்லை,' என்கிறார் விக்கிரமன்.

அதற்கு மைனா, 'அது உங்கள் புரிதலாக கூட இருக்கலாம். அந்த பேக்டை நீங்கள் உங்களுக்குள் வைத்துக்கொள்ளலாம். ஆனால், எனக்கும் அந்த பேக்ட் இருக்கிறது என்கிறேன் நான்', என்கிறார்.அத்துடன், ப்ரோமா முடிவடைகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!