நடிகர் சூர்யாவின் 25 ஆண்டுகள்..!

நடிகர் சூர்யாவின் 25 ஆண்டுகள்..!
X

நடிகர் சூர்யா.

Actor Surya News -நடிகர் சூர்யா திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. இதுகுறித்து அவர், ஸ்பெஷலான ட்வீட் செய்துள்ளார்.

Actor Surya News -நடிகர் சூர்யா, தான் திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவருக்கு, அவரது ரசிகர்களும் குடும்பத்தினரும் நெஞ்சம் மகிழ்ந்து வாழ்த்துகள் சொல்லி பெருமிதம் கொண்டனர். அவரது முதல் திரைப்படம் வெளியாகி இன்றுடன்(06/09/2022) 25 ஆண்டுகள் ஆகிறது.

இந்தநிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் 'அழகான உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள் என்றும் கனவு காணுங்கள்... நம்புங்கள்... நிச்சயம் ஒரு நாள் அந்தக் கனவு நிறைவேறும்' என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் வசந்த் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு நடிகர் விஜய்யுடன் சூர்யா நடித்த 'நேருக்கு நேர்' திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில்தான் சூர்யா திரையுலகில் நடிகராக அறிமுகமாகி நடிப்புத்துறையில் தடம் பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, அவர் பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது திரையுலகில் 25 ஆண்டுகள் என்ற மைல்கல்லை வெற்றிகரமாகத் தொட்டுள்ளார். இந்தநிலையில், தற்போது நடிகர் சூர்யா 'வணங்கான்', 'சூர்யா 42' மற்றும் 'சூரரைப்போற்று' இந்தி ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 25 ஆண்டுகளில் சூர்யா, இதுவரை 40 படங்களில் நடித்து முடித்துள்ளார். அவற்றில் பெரும்பாலானவை வெற்றிப் படங்கள்தான் என்பது பெருமிதத்துக்குரியது. நடிகர் சூர்யா தனது தந்தை சிவக்குமாருடன் மட்டுமின்றி விஜய், விஜயகாந்த், விக்ரம், உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். அதேபோல் இந்த 25 ஆண்டுகளில் மணிரத்னம், பாலா, ஏஆர் முருகதாஸ், கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, கே.எஸ்.ரவிக்குமார், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல பிரபல இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் 25-ஆம் ஆண்டு என்பது பல்வேறு வகைகளில் அவருக்கு சிறந்த ஆண்டு என்பதும் அவரது திரையுலகப் பயணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்பதும் அடிக்கோடிட்டு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

இந்த ஆண்டுதான், அவரது 'சூரரைப்போற்று' படம் பல தேசிய விருதுகளைப் பெற்றுத் தந்தது. அதேபோல், நடிகர் கமல்ஹாசனுடன் 'விக்ரம்' படத்தில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தோன்றி படம் முழுக்கத் தோன்றிய அனைவரையும் முந்திக்கொண்டு ரசிகர்களின் பெருவாரியான வரவேற்பைப் பெற்றார். உண்மையிலேயே சூர்யாவின் 25 ஆண்டுகள் என்பது ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டுகள் எனினும் 25-ம் ஆண்டு என்பது கூடுதல் ஸ்பெஷல்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!