"ஜகமே தந்திரம்"சரவெடியுடன் தயாராகுங்கள் உங்கள் அபிமான சுருளியை வரவேற்க

ஜகமே தந்திரம்சரவெடியுடன் தயாராகுங்கள் உங்கள் அபிமான சுருளியை வரவேற்க
X
தனது வாழ்வில், தனது இருப்பிடத்தை அடைய நன்மைக்கும் தீமைக்குமான போரில் பங்குகொள்ளும், லோக்கல் கேங்ஸ்டர் சுருளியின் மிகப்பெரிய பயணத்தை சொல்கிறது "ஜகமே தந்திரம்" திரைப்படம்.

தனது வாழ்வில், தனது இருப்பிடத்தை அடைய நன்மைக்கும் தீமைக்குமான போரில் பங்குகொள்ளும், லோக்கல் கேங்ஸ்டர் சுருளியின் மிகப்பெரிய பயணத்தை சொல்கிறது "ஜகமே தந்திரம்" திரைப்படம்.

சரவெடியுடன் தயாராகுங்கள் உங்கள் அபிமான சுருளியை வரவேற்க, Sony Music நிறுவனம் Netflix மற்றும் YNOT Studios உடன் இணைந்து, இந்த வருடத்தின் எதிர்பார்ப்புகுரிய படமான "ஜகமே தந்திரம்" படத்தின் இசை ஆல்பத்தினை வெளியிட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையில், ரசிகர்களை மயக்கும் அற்புத பாடல் தொகுப்பினை கொண்டுள்ளது,

இந்த திரைப்படம். இப்படத்தில் தனுஷ் எழுதி, பாடிய "ரகிட ரகிட" பாடல் மொத்த தேசத்தையும் கட்டிப்போட்டு, அனைவரையும் முணுமுணுக்க வைத்த நிலையில், சமீபத்தில் வெளியான "நேத்து" காதலர்களின் கீதமாக ரொமான்டிக் மெலடியாக அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்படத்தில் மொத்தமாக இதே போல் தனித்தன்மை மிக்க சிறப்பு மிக்க பாடல்கள் உள்ளது. உலகமெங்கும் இசை வெளியான நிலையில் அற்புதமான பாடல்களையும் தொடர்ச்சியாக லூப் மோடில் கேட்டு, கொண்டாடுங்கள்.

இசை வெளியீடு குறித்து Sony Music நிறுவனத்தின் சார்பில் Managing Director - ராஜாத் காகர் அவர்கள் கூறியதாவது..

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், இந்த வருடத்தின் மிகச்சிறந்த ஆல்பமான "ஜகமே தந்திரம்" படத்தின் இசையை YNot Studios, Reliance Entertainment, AP International & Netflix உடன் இணைந்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் , சந்தோஷ் நாரயணன் போன்ற பெரும் திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே சிறப்பு தான். அதிலும் இந்த அனைத்து திறமையாளர்களும், இந்த ஒரே படத்தில் இணைந்து மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளார்கள். இப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியான "ரகிட, ரகிட " மற்றும் "புஜ்ஜி" பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், ரசிகர்கள் இப்போது மொத்த ஆல்பத்தையும் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என நம்புகிறோம்.

இசை வெளியீடு குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் அவர்கள் கூறியதாவது.. இப்படத்தின் ஒவ்வொரு பாடலையும், ஸ்டுடியோவில் மிகப்பெரும் உழைப்பில், அதிக நேரத்தை செலவளித்து உருவாக்கினோம். இசையில் நான் நினைத்த பல விசயங்களை செய்து பார்க்கும் சுதந்திரம், இப்படத்தில் கிடைத்தது. இப்படத்தின் பாடல் உருவாக்கம் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. "ரகிட ரகிட" பாடல் வெளியான போது பலர் தங்களை மன அழுத்தத்திலிருந்து அப்பாடல் மீட்டதாக கூறியது, பெரும் மகிழ்ச்சியை அளித்தது. இப்போது Netflix உலகெங்கிலும் மொத்த ஆல்பத்தை வெளிக்கொண்டுவரும் நிலையில் மற்ற பாடல்களையும் அதே போல் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

"ஜகமே தந்திரம்" படத்தின் வெவ்வேறு கட்டத்தை, இப்படத்தின் 8 பாடல்களும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பாடல்களின் முழு விபரம்

தமிழ்

ரகிட, ரகிட | பாடகர்கள் : தனுஷ், தீ | பாடலாசிரியர்: விவேக் புஜ்ஜி | பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் | பாடலாசிரியர்: விவேக்நேத்து | பாடகர்கள் : தனுஷ் | பாடலாசிரியர்: தனுஷ் ஆல ஓல | பாடகர்கள் : ஆண்டனி தாசன் ,சந்தோஷ் நாரயணன் | பாடலாசிரியர்: விவேக் தீங்க்கு தக்கா | பாடகர்கள் : அறிவு, GKB, சந்தோஷ் நாரயணன் | பாடலாசிரியர்: அறிவுதேய்பிறை | பாடகர்கள் : மீனாக்ஷி இளையராஜா, சந்தோஷ் நாரயணன் | பாடலாசிரியர்: மதுரை பாபாராஜ்கலரே கலர்வசம் | பாடகர்கள் : ஆண்டனி தாசன் | பாடலாசிரியர்: ஆண்டனி தாசன்நான் தாண்டா மாஸ் | பாடகர்கள் : OFRO, அறிவு, சந்தோஷ் நாரயணன் | பாடலாசிரியர்: அறிவு

TELUGU:

RAKITA RAKITA | ANANTHU, SUSHA, SANTHOSH NARAYANAN | BHASKARABHATLA BUJJI | SANTHOSH NARAYANAN | BHASKARABHATLANEETHO | VIJAYNARAIN | BHASKARABHATLARELA RELA | ANTHONY DASAN | BHASKARABHATLAVETA VETA VETA | SANTHOSH NARAYANAN | BHASKARABHATLA VELTUNNARA | SAVITHA SAI | BHASKARABHATLANURELLU NINDIPOYAYAA | SANNIDHANANDHAN | BHASKARABHATLANAATHOTI RACE-U | OFRO, SANTHOSH NARAYANAN | BHASKARABHATLA

கொளுத்துங்கள் சரவெடியை கொண்டாடுங்கள் இந்த வருடத்தின் மிகச்சிறந்த இசையை !

எதிர்பார்ப்புமிக்க "ஜகமே தந்திரம்" திரைப்படம் உலகளவில் 2021 ஜூன் 18 அன்று Netflix தளத்தில் வெளியாகிறது.

நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் :

எழுத்து, இயக்கம் : கார்த்திக் சுப்புராஜ்

நடிகர்கள் : தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஜோஷப் ஜோஜு ஜார்ஜ், கலையரசன், சரத் ரவி, ரோமன் ஃபியோரி, சவுந்தர்ராஜா, துரை ராமசந்திரன், மாஸ்டர் அஷ்வத்

இசை : சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு : ஷ்ரேயாஸ் கிருஷ்ணா

படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்

தனது வாழ்வில், தனது இருப்பிடத்தை அடைய நன்மைக்கும் தீமைக்குமான போரில் பங்குகொள்ளும், லோக்கல் கேங்ஸ்டர் சுருளியின் மிகப்பெரிய பயணத்தை சொல்கிறது "ஜகமே தந்திரம்" திரைப்படம்.

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்

Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படததை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும்.

YNOT Studios நிறுவனம்

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தயாரிப்பு நிறுவனம் ஆகும். 2009 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை துவங்கிய தயாரிப்பாளர் S. சசிகாந்த் அவர்கள் 2021 வரை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் மொத்தமாக 18 திரைப்படங்களை தயாரித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு இயக்குநர்கள் புஷ்கர் & காயத்திரி இயக்கிய "விக்ரம் வேதா" திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இத்திரைப்படம் 3 மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பாக சமீபத்தில் வெளியான , அரசியல் காமெடி படமான "மண்டேலா" விமர்சக ரீதியிலும், மிகப்பெரும் வரவேற்பை பெற்று, வெற்றிபெற்றது. இந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக "ஜகமே தந்திரம்" Netflix தளத்தில் 2021 ஜூன் 18 அன்று வெளியாகிறது.நிறுவனர் : S. சசிகாந்த் @sash041075 YNotStudios Twitter & Instagram - @studiosynot

Reliance Entertainment நிறுவனம் ,

இந்தியாவின் மிகப்பெரும் வணிக குழுமமான Reliance குழுமத்தை சேர்ந்த முன்னணி மீடியா திரைத்துறை, பொழுதுபோக்கு துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் உலகளவில் புகழ்பெற்ற இயக்குநர் தயாரிப்பாளர் Steven Spielberg அவர்களின் DreamWorks Studios உடன் 2009 முதல் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதனுடன் Amblin Partners நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வருகிறது. Reliance Entertainment மீடியா இந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து பல வெற்றிகரமான படைப்புகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் The Help, War Horse, Lincoln, The Hundred Foot Journey, The Girl on the Train, A Dog's Purpose, Bridge of Spies, The Post ஆகியவை முக்கிய படைப்புகளாகும் மேலும் 2019 ஆம் ஆண்டு Golden Globes மற்றும் Oscar விருது வென்ற, Green Book & 2020 Academy Award சமர்பிக்கப்பட்ட மற்றும் Golden Globes விருது வென்ற 1917 படங்களும் முக்கியமானவை.

#JagameThandhiram Album Out Now !

Tamil : https://smi.lnk.to/JagameThandhiram

Telugu : https://smi.lnk.to/JagameThandhiram-Telugu

Image link

https://vandam.netflix.com/shares/b0cef0b33a63476ea8b7b3c3076394ec

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!