முதல்வர் நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் சார்பில் 25 லட்ச ரூபாய்;
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் ரூபாய் 25 இலட்சம் வழங்கினார்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்க தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்து இருந்தார்.பல்வேறு தரப்பினரும் இந்த நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
அதேபோல் தொழில் நிறுவனங்களும் இந்த நிதி உதவி வழங்கி வருகின்றன. தி.மு.க. அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என இதன் தலைவரான முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான வழங்கினர்.
சட்டமன்ற உருப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ருபாய் 25 இலட்சம் காசோலையை வழங்கினார்.ஜோஹோ நிறுவனம் ரூ 5 கோடி கொடுத்துள்ளது.
இந்நிலையில் இன்று அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் கொரனா நிவாரண நிதியாக 25 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.இதில் என் சுவாரஸ்யம் என்றால் அரசு சார்பில் முதலில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் 2.5 கோடி என தெரிவிக்கப்பட்டது.தற்போது திருத்தப்பட்ட செய்தி குறிப்பில் 25 லட்ச ரூபாய் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu