மெர்சல் சீனு மோகன் - பிறந்தநாள்.
'கிரேசி' மோகனின் நாடகங்களில் நடித்து பிரபலமான சீனு மோகன் 1956 ம் ஆண்டு மே மாதம் 17 ம் தேதி பிறந்தார்
சீனு மோகன் () (17 மே 1956 – 27 டிசம்பர் 2018), தமிழ் மேடை நடிகர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் மோகன் ஆகும். கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகக் குழுவில் இடம்பெற்றுவந்த மோகன், கிரேசி மோகனின் பல நாடகங்களில் சீனு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து சீனு மோகன் ஆனார்.சீனு மோகன் 3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ளதோடு, சில திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
'கிரேசி' மோகனின் நாடகங்களில் நடித்து பிரபலமானவர் மோகன். இவர் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திர பெயரில் நடிப்பதால் சீனு மோகன் என்று அழைக்கப்பட்டார். 1979 இல் கிரியேஷன்ஸ் நாடகக் குழு தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட நாடக்கக்குழு தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அக்குழுவில் நடித்து வந்தார் சீனு மோகன். நாடகத்தில் இருந்து மெல்ல சினிமாவிலும் முகம் காட்டத் தொடங்கினார். அஞ்சலி, தளபதி, வருஷம் 16 உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனாலும் மேடை நாடகங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வந்தார்.
நாடகங்களை தொடர்ந்து 'கிரேசி' மோகன் குழு தொலைக்காட்சி தொடர்கள் எடுத்தது. அந்த தொடர்களிலும் நடித்தார் சீனு மோகன். மேலும் பல குறும்படங்களிலும் நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி படத்தில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் அவர், அதன் பிறகு ஆண்டவன் கட்டளை, கோலமாவு கோகிலா, ஸ்கெட்ச், வடசென்னை, மெர்சல் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
இதுவரை 3000க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்த சீனு மோகனை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே உண்மை. இந்நிலையில்
சீனு மோகன் மாரடைப்பால் கடந்த 2018 ம் ஆண்டு டிசம்பர் 27 ம் தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 61 ஆகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu