பழம்பெரும் நடிகை - சாந்தகுமாரி பிறந்த நாளின்று..

பழம்பெரும் நடிகை - சாந்தகுமாரி பிறந்த நாளின்று..
X
வசந்த மாளிகையில் சிவாஜிகணேசனின் தாயாக நடித்தவர்.

திரைப்படங்களில் தாய் வேடமேற்று நடிப்பதில் புகழ் பெற்ற சாந்தகுமாரி 1920 ம் M மே 17ம் தேதி பிறந்தார்.

பி. சாந்தகுமாரி இவர் கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் 250-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல தெலுங்குத் திரைப்படங்களில் பின்னணியும் பாடியுள்ளார். இவர் பழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் பி.புல்லையா என்பவரது மனைவி ஆவார். வசந்த மாளிகை திரைப்படத்தில் சிவாஜிகணேசனின் தாயாக நடித்திருப்பவர் இவர் தான் தெரியுமா?.

வெல்லால சுப்பம்மா எனும் இயற்பெயரைக் கொண்ட சாந்தகுமாரி, ஆந்திர மாநிலம் கடப்பா எனும் மாவட்டத்தில் புரொதுட்டூர் எனும் ஊரில் 1920 ம் ஆண்டு பிறந்தவர். பேராசிரியர் சாம்பமூர்த்தியிடம் மாணவியாகச் சேர்ந்து வாய்ப்பாட்டும் வயலின் வாசிப்பும் கற்றார். அப்போது சக மாணவியாக இருந்தவர் டி. கே. பட்டம்மாள் ஆவார்.

தனது ௧௩ வது வயதில் கருநாடக இசையில் வாய்ப்பாட்டு, வயலின் வாசிப்பில் தேர்ச்சி பெற்றார். தனது 15வது வயதில், தென்னிந்தியா முழுவதும் இசைக் கச்சேரிகளை செய்ய ஆரம்பித்தார். பள்ளியொன்றில் இசையாசிரியராகவும் பணியாற்றி வந்தார்.கச்சேரி ஒன்றில் சாந்தகுமாரியை சந்தித்த பி. வி. தாஸ் எனும் இயக்குநர், மாயா பஜார் (1936) திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.


சாந்தகுமாரி – பழைய பட ரசிகர்கள் இவரை இப்போது கூட நினைவில் வைத்திருக்க முடியும். ஏனென்றால் அந்தக் காலத்தில் மிகப் பிரபலமான இரண்டு படங்களைப் பார்க்காத தமிழர்கள் இருக்கவே முடியாது. 1. சிவந்தமண்(1969) 2.வசந்தமாளிகை (1972) இந்த இரண்டுப் படங்களிலும் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்தவர் ! சிவந்த மண்ணில் " பாரத் " என்றும் வசந்த மாளிகையில் "ஆனந்த் " என்றும் கதை நாயகனை அடிக்கடி அழைக்கின்ற இவர் குரல் இப்போதும் கூட காதில் ஒலிக்கும்! இவரை ஒரு துணை நடிகை என்று தான் பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் இவர் ஒரு சிறந்த வயலின் கலைஞர். 1930களின் துவக்கத்தில் D.K.பட்டம்மாள் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் இவர் தான் வயலின் பக்க வாத்தியம் வாசிப்பவராக இருந்திருக்கிறார்.

பட்டம்மாளின் வகுப்புத்தோழி.கர்நாடக சங்கீதத்தில் முதல் வகுப்பில் அப்போது தேறியவர் சாந்தகுமாரி.1935 ல் விதி வசத்தால் நடிகை ஆகியிருக்கிறார். அப்போதே 'சாரங்கதரா '(1935 ) படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

அதே வருடம் மாயாபஜார் என்ற படத்தில் நடித்துள்ளார். 1936ல் இவர் நடித்து வெளி வந்த' தர்ம பத்தினி' படம் அக்கினேனி நாகேஸ்வர ராவ் ( தேவ தாஸ் ) குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன படமாம்!

ஒரு மிக சாதாரண துணை நடிகை! வெள்ளாள சுப்பம்மா என்ற இயற் பெயர் கொண்ட சாந்தகுமாரி மிகச் சிறந்த நடிகரான எஸ்.வி.ரங்காராவின் உறவினர்.சாந்தகுமாரி – புல்லையாவின் மகன் தெலுங்குப் பட டைரக்டர் சி.எஸ்.ராவ். இவருக்கு முதல் மனைவி பிரபல நடிகை கண்ணாம்பாவின் மகள். இந்த திருமாணம் நீடிக்கவில்லை. அதன் பின் அப்போது இவரைப் போலவே

டிவோர்சீயாயிருந்த பிரபல நடிகை ராஜசுலோச்சனாவை திருமணம் செய்து கொண்டார். சி.எஸ்.ராவ்! சிலவருடங்களுக்கு முன் தள்ளாத வயதில் யானைக்கால் வியாதியால் அவதிப்படும் தன்னை ராஜ சுலோச்சனா கைவிட்டு விட்டார் என்று பகீரங்கமாக குற்றம் சாட்டி விட்டு 2006 ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி தனது 85 வது வயதில் இறந்து போனார்.

திரைப்படங்களில் தாய் வேடமேற்று நடிப்பதில் புகழ் பெற்றிருந்தார். திரைப்படங்களில் சாந்தகுமாரியின் மகனாக நடித்த நடிகர்கள், திரைப்படத்திற்கு வெளியே இயல்வாழ்விலும் 'மம்மி' என இவரை அழைத்தனர்.சாந்தகுமாரி மொத்தமாக 250 திரைப்படங்களில் நடித்தார். அவற்றுள் 60 தமிழ்த் திரைப்படங்கள் அடங்கும்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!