'நவம்பர் ஸ்டோரி' - தமன்னா பத்தி ஒரு சங்கதி தெரியுமா?

நவம்பர் ஸ்டோரி - தமன்னா பத்தி ஒரு சங்கதி தெரியுமா?
X

‘நவம்பர் ஸ்டோரி’ - தமன்னா.

‘நவம்பர் ஸ்டோரி’ -டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் “இன்னிக்கு மிட் நைட் 12 மணிக்கு” (மே 20ஆம் தேதி)

தமன்னா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப் சீரிஸ் 'நவம்பர் ஸ்டோரி' இன்னிக்கு மிட் நைட் 12 மணிக்கு (மே 20ஆம் தேதி) அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக போகுதாம்.


7 எபிசோட்களைக் கொண்ட இத்தொடரை ராம் சுப்ரமணியம் இயக்கியுள்ளார். இதில் தமன்னாவுடன் பசுபதி, ஜி.எம்.குமார், அருள்தாஸ், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிச்சிருக்க்காய்ங்க.

இத்தொடரில் அனுராதா என்னும் ஹேக்கர் ரோலில் நடிச்சிருக்கும் தமன்னா-கிட்டே பேசினப்போ 'ஐ லவ் திஸ் கேரக்டர்.. அனுராதா ஒரு சுதந்திரமான, பயமறியாத, புத்திசாலியான இளம் பெண். அப்படியாப்பட்ட கேர்ள் (?!) ஒரு இரக்கமற்ற கொடூர கொலைகாரனிடமிருந்து தன் அப்பாவை எப்படி காப்பாற்றுகிறாள் என்பதுதான் ஸ்டோரி. இந்த கதையின் நாயகியா ஒரு வலிமையான லேடி ரோலில் நடிப்பது என் சினிமா வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த அனுபவம்' அப்படீன்னார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!