காதலுக்கும்,கல்லூரிக்கும் தனி இலக்கணம் படைத்த முரளி பிறந்த தினம்.

காதலுக்கும்,கல்லூரிக்கும் தனி இலக்கணம் படைத்த முரளி பிறந்த தினம்.
X
புகழின் உச்சத்தில் இருக்கையில் தன் 46 வது வயதில் இறந்த முரளிக்கு இன்று 57 ஆம் பிறந்தநாள்.

புகழின் உச்சத்தில் இருக்கையில் தன் 46 வது வயதில் இறந்த முரளிக்கு இன்று 57 ஆம் பிறந்தநாள்.

கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய வெற்றி நாயகர்கள் வரிசையில் இணைந்த குறிப்பிடத்தக்க இந்த நடிகர் முதல் படமே சூப்பர்ஹிட்டாக்கும்.

முரளி கர்நாடக மாநிலம் பெங்களுரில் 1964 ம் ஆண்டு மே மாதம் 19 ம் தேதி பிறந்தார். இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 -ல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 1990 -ல் வந்த " புதுவசந்தம் ",

1991 -ல் வந்த "இதயம்", படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. " கடல் பூக்கள் " என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.

முரளியின் தந்தை சித்தலிங்கையா கன்னடர். பல படங்களைத் தயாரித்துள்ளார். முரளியின் தாயார் தமிழகத்தைச் சேர்ந்தவர். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகாஷ் என்ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர்.இவர் வண்ணார் சமுகத்தை சேர்ந்தவரவார்.

அதர்வா " பாணா காத்தாடி " என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தில் முரளி சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.இவர் 46 வது வயதில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்

தமிழ்த் திரையுலகின் மூலம் காதலுக்கும், கல்லூரி மாணவத்துக்கும் தனி இலக்கணம் படைத்த திரைப்படங்களில் நடித்து பெருமை படைத்தவர் நடிகர் முரளி.கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் 1984 -ல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

1990 -ல் வந்த " புதுவசந்தம் ", 1991 -ல் வந்த "இதயம்", படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. " கடல் பூக்கள் " என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.

1984ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில், அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் இவர். இவரது அப்பா சித்தலிங்கையா, பிரபலமான கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.


கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய வெற்றி நாயகர்கள் வரிசையில் இணைந்த குறிப்பிடத்தக்க இந்த நடிகர் முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதால் வெற்றிப் பட நாயகனாக உருவெடுத்தார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்தார். காதல் படங்களுக்குத் தனி இலக்கணம் வகுத்தவை முரளி நடித்த படங்கள்.

இயக்குநர்கள் மணிரத்னத்தின் முதல் தமிழ்ப்படமான 'பகல் நிலவு', விக்ரமனின் முதல் படமான 'புது வசந்தம்', கதிரின் முதல்படமான 'இதயம்' என்று முரளி ஹீரோவான படங்களின் வெற்றி அவரை புது இயக்குநர்களின் தனிப்பெரும் ஹீரோவாகக் கருத வைத்தது. 'முரளியின் முதல் படத்தை இயக்கும் இயக்குநர்கள் வெற்றிகரமான இயக்குநர்களாக வருவார்கள்' என்ற சென்டிமென்ட்படி, அந்தக் காலகட்டத்தில் படம் இயக்க வந்தவர்களின் முதல் ஹீரோ சாய்ஸ் முரளியாகத்தான் இருந்தார்.

தன் புராஜக்ட்டுக்கான ஸ்கிரிப்ட் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, தனக்குப் பிடித்திருந்தால் அந்த இயக்குநருக்குத் தன் சொந்தப் பணத்திலிருந்து அட்வான்ஸ் தரும் வழக்கத்தையும் வைத்திருந்தார் முரளி.


சென்டிமென்டைத் தாண்டி அற்புதமான ஸ்கிரிப்ட்டுகள் அவரைத்தேடி வர அதுவும் ஒரு காரணமாக இருந்தது. ஹீரோவான கணக்குப்படி 98 படங்களை முடித்து விட்டிருந்தார் முரளி.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil