வாழைப்பழம் கேட்டு டீ ஸ்டாலை கவிழ்த்துவிடும் - நடிகர் பவுன்ராஜ் மரணம்.

வாழைப்பழம் கேட்டு டீ ஸ்டாலை கவிழ்த்துவிடும் - நடிகர் பவுன்ராஜ் மரணம்.
X
அடுத்தடுத்த மரணங்கள் சக கலைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'.. 'ரஜினி முருகன்' படத்தின் நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' அந்த ஆண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்று. அப்படத்திலும், அதேபோல, 2015 ஆம் ஆண்டு வெளியான 'ரஜினி முருகன்' படத்திலும் நகைச்சுவையோடு நடித்து கவனம் ஈர்த்தார் பவுன்ராஜ்.

குறிப்பாக, ரஜினி முருகன் படத்தில் வாழைப்பழம் கேட்டு டீ ஸ்டாலையே கவிழ்த்துவிடும் அவரது காட்சி ரசிக்க வைத்தது.


இந்நிலையில், பவுன்ராஜ் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு இயக்குநர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில், "வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார். அவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்" என்று வருத்தமுடன் தெரிவித்துள்ளார். சீமராஜா படத்திலும் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாதன், விவேக், தாமிரா, கே.வி.ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, தற்போது பவுன்ராஜ் எனக் கடந்த சில மாதங்களில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் அடுத்தடுத்த மரணங்கள் சக கலைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!