இன்னிய யூத்களின் Music bone - சந்தோஷ் நாராயணன் பர்த் டே!
கதைக்கு தகுந்தாற்போல இசையமைக்கும்இசையை ரசிக்கும் இன்றைய இளைஞர்கள் முதுகெலுப்பாக திகழும் சந்தோஷ் நாராயணனுக்கு இன்று பிறந்தநாள்.
கோலிவுட்டோ, ஹாலிவுட்டோ- எங்கே ஆனாலும் இசையமைப்பாளர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிபாணி இருக்கும், இதில் ஏனைய இசையமைப்பாளார்களிடம் இருந்து சந்தோஷ் நாராயணனின் இசை சற்று வித்யாசமாகவே இருக்கும்.
குறிப்பாக இவர் இசையமைக்கும் படங்கள் அனைத்திலும் தீம் மியூசிக் மற்றும் பின்னணி இசையில் மிரட்டிபுடுவார். சூது கவ்வும், ஜிகர்தண்டா துவங்கி ரஜினியின் கபாலி படத்தில் வந்த நெருப்புடா இசை வரை அவரது பின்னணி இசை ரசிகர்கள் மனதில் இன்னிக்கும் நிலைச்சு நிற்குது இல்லையா? மறக்க முடியுமோ?.
இந்த சந்தோஷ் நாராயணன் படத்தின் கதைக்கு தகுந்தாற்போல இசையமைப்பவர். அதனால் தான் அவர் தமிழில் மட்டுமே தற்போது வரை இசைமைத்துக் கொண்டிருக்கிறார். மற்ற மொழிகளில் இருந்து வந்த வாய்ப்புகளை மொழி தெரியாது என்கிற ஒரே காரணத்திற்காக அவர் ஏற்றுக் கொள்வதில்லை. மொழி தெரியவில்லை என்றால் கதையை ஆழமாக புரிந்து இசையமைக்க முடியாது என்பதால் தான் பல பாலிவுட் பட வாய்ப்புகளையும் சந்தோஷ் நாராயணன் நிராகரித்துள்ளார் என்றும் ஒரு சேதி உண்டு.
அந்த காலத்துலே ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி கதை எல்லாம் படிச்சிருப்பீங்க இல்லே? அப்படித்தான் இந்த சந்தோஷ் நாராயணனை போனில் பிடிக்கிறது அம்புட்டு சுலபம் கிடையாது.. அதுக்காக நேரில் போனால் உடனே பார்க்க வழியுண்டா?-ன்னு கேட்டா இல்லை-ன்னுதான் தலையை ஆட்டோணுமக்கும்.. ஆனாலும் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவராச்சே என்று ஒரு வழியாய் கஷ்டப்பட்டு நம்ம வாசகர்களுக்காக பிடிச்சு பேச்சுக் கொடுத்த போது அவா சொன்ன சேதி இது தான்..
"1983ல் இதே மே 15இல் திருச்சியில் பிறந்தேன், காலேஜ் லைஃப்-பிலே கொஞ்சம் காதுலே மெட்டு சத்தம் கேட்டுகிட்டே இருக்கும் கொஞ்சம் டீடெய்லா சொல்லணுமுன்னா சின்ன வயசிலே இருந்தே எனக்கு பிடிச்சமான விஷயங்கள் இரண்டு. ஒன்று, எல்லோருக்கும் பிடித்த இசை, மற்றொன்று எல்லோருக்கும் பிடிக்காத சிலருக்கு பிடித்த கிரிகெட்.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு திருச்சியிலுள்ள JJ.கல்லூரியில் படித்து தேர்வு பெற்றேன். சின்னவயசில் இருந்தே இசையில் நாட்டம் கொண்ட எனக்கு அந்த கல்லூரி வளாகம்-தான் இசைக்கதவை திறந்து விட்டுச்சு. வருடந்தோறும் கல்லூரியில் நடக்கும் விழாக்களிலும், போட்டிகளிலும், என்னோட இசை இல்லாமல் இருந்ததே இல்லை. அதுக்காகவே கொஞ்சம் கொஞ்சமாக தனது இசை அறிவை மேருகேற்றிக்கொண்டே வந்தேன்.
கர்நாடக இசைதான் பல்வேறு இசைக்கு ஆதாரமாக இருக்கிறது என்பதை, காலேஜில் படிக்கும் நாட்களுக்கு முன்பே உணர்ந்த காரணத்தால் புல்லாங்குழலை முரளி கிருஷ்ணன் என்பவரிடம் கற்றுக்கொண்டேன் . பின்னாளில் கல்லூரியில் நடக்கும் விழாக்களில் பங்கு கொள்ள உதவும் வகையில், அதுவும் குறிப்பாக தன் நண்பர்களுக்காக கிபோர்ட்(keyboard) கற்றுத் தேர்ந்தேன்.அதன் விளைவாக என்னோட இசைக்குழுவுக்கு பாராட்டுகளும் பதக்கங்களும் குவியத்தொடங்கின .
கல்லூரி வாழ்க்கைக்கு பின்னாடி மிகப்பெரிய IT கம்பெனியின் அழைப்பை கூட நிராகரிச்சுட்டு ஒரு ஒலிப்பதிவுக் கூடத்துலே பொறியாளராக பணியாற்றினேன். அந்தக் காலகட்டத்துலே ஒரு ரெக்கார்டிங் இன்ஜினீயரா மட்டுமில்லாமல் அரேஞ்சர், ப்ரோக்ராமர் -னு கெடச்ச வேலை எல்லாம் செஞ்சிக்கிட்டு ஹாபிக்காக இண்டிபெண்டண்ட் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பல பாடல்களுக்கு இசையமைத்து வந்தேன்..
அப்படித்தான் 2011ஆம் வருசம், என்னோட வாழ்க்கையில் ஒரு சந்தோஷ திருப்புமுனையாக "அத்வைதம்"( Advaitam) என்ற தெலுங்கு குறும்படத்தில், நான் இசையமைத்த இரண்டு பின்ணணி இசை கோர்வைகள் ( ஒன்று- 5 நிமிடமும் , ஒன்று -8 நிமிடமும் இருக்கும்).இப்படதிற்கு தேசிய விருது கிடைத்தது .
இப்படம் சிறந்த கல்விக்கான படமாக('The best educational movie') விருது பெற்றவுடன்,திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் பலருக்கும் நோட்டபிள் பர்சனா ஆயிட்டேன். அதைப் பார்த்து என்னை. முதலில் நெருங்கியவர் " அட்டகத்தி ". ஆம் 2012ம் ஆண்டில் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற கானா பாடல்கள் மூலம்தான் தமிழ் திரையில் இசையமைப்பாளர் அப்படீங்கற அங்கீகாரம் எனக்கு கிடைச்சிது கொடுத்துச்சு. அதே வருசம் வெளியான "பீட்சா" திரைப்படம் மூலமும் 2013ல் வெளியான "சூதுகவ்வும்" படத்தின் பிஜிஎம்-மும், காசு துட்டு மணி மணி பாடல் வழியாவும், இன்னிக்கும் தொடர்ந்து ரசிக்க தக்க மியுசிக் டைரக்டரா தக்க வச்சிருக்குது" அப்ப்டீன்னார்.
2014ல் இவரது இசையில் வெளியான "குக்கூ" திரைப்படம் இவரின் பெயரை தமிழ் சினிமாவில் அழுத்தமாக பதிவு செய்தது. அது பத்திக் கேட்டப் போது, "ஒரு படத்திற்கு என்ன தேவை என்பதை எப்படி புரிந்து கொள்கிறேன் என்று கேட்டால் படத்தை பார்த்த பிறகு எந்த இசை தேவை என்று என் மனம் சொல்லும். அதன் படி நான் நடக்கிறேன். உதாரணமாக "குக்கூ" படத்திற்கு இசைக் கலைஞர்கள் ஒன்றாக வாசித்த 'லைவ் ஒர்கேச்டிரா'(live orchestra) தேவைப்பட்டுச்சு. ஆனால் "ஜிகிர்தண்டா" படத்திற்கு நான் அதிகமாக உபயோகப்படுத்தியது எலக்ட்ரானிக் இசைதான்" (electronic music)" என்றார்
அதன்பிறகு "எனக்குள் ஒருவன்", "36வயதினிலே", "இறுதிச்சுற்று", "காதலும் கடந்து போகும்", "மனிதன்", "இறைவி" "காலா" மேயாத மான், பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் மூலம் தனது இசையமைப்பை மெருகேற்றிக்கொள்ளவும் சந்தோஷ் நாராயணன் தவறியதில்லை.
இவரின் 25வது படமான வெற்றிமாறனின் "வட சென்னை" திரைப்படம், சந்தோஷ் நாராயணின் திரைப்பயணத்தின் மைல்கல் எனலாம். ஏற்கனவே மெட்ராஸில் கொடுத்தது போக "வடசென்னை"யின் பின்னணி இசையில் ரசிகர்களை புல்லரிக்க வைத்திருந்தார்.
அதன் பின்னர் கலைப்புலி தயாரிப்பில் மாரி செல்வராஜின் "கர்ணன்" படத்தின் பாடல்கள் தனித்துவம் என்ற அடையாளத்தை பெற்றது. "ஜகமே தந்திரம்" படத்தின் ரகிட ரகிட பாடலின் வரிகள் தன்னம்பிக்கையை கொடுக்கிறது என்றால், சந்தோஷ் நாராயணனின் இசை, குழந்தைகளையும், பெரியவர்களையும் ஒரு சேர துள்ள வைக்கும் இவரிடம் இந்த தாடி ரகசியத்தைப் பற்றி நிறையப் பேர் கேட்டிருக்காங்களாம்.. அது வேற ஒண்ணுமில்லை... சோம்பேறித்தனம்தான் (சிரிக்கிறார்)! ட்ரிம்மிங், ஷேவிங்க்கு எல்லாம் நேரம் செலவழிக்க சோம்பேறித்தனம் . தாடி சமாளிக்க முடியாத அளவுக்கு வளர்ந்து அசௌகர்யமா உணரும்போதுதான் ட்ரிம் பண்ணிக்குவேன். கண்ணாடி பார்க்கவே மாட்டேன். சிம்பிளா . டீ-ஷர்ட், ஷார்ட்ஸ்- சில் இருக்கவே பிடிக்கும்" என விளக்கமளிச்சு சிரிச்சார்
அடுத்தடுத்து வருவதில் செல்கட் செஞ்ச திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் நிலையில், இவரது இசையமைப்பில் உருவான "என்ஞாயி எஞ்ஞாமி" இண்டிபெண்டண்ட் பாடல், யூடியுப்பில் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மெகா ஹிட் அடிச்சிகிட்டு போய் கிட்டே இருக்கும் இந்த இசை செல்வம் சந்தோஷ் நாராயணின் பிறந்த நாள் வாழ்த்தை நம் இன்ஸ்டாநியூஸ் செய்தி குழு சார்பிலும் சொல்லி விட்டேன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu