சின்னஞ்சிறு கிளியே - அவுட்ஸ்டேண்டிங் அச்சீவ்மெண்ட் அவார்டு
மக்கள் பார்வைக்கு போவதற்கு முன்பே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்ட சின்னஞ்சிறு கிளியே அவுட்ஸ்டேண்டிங் அக்சீவ்மெண்ட் அவார்ட் வாங்கியுள்ளது.
செண்பா கிரியேஷன்ஸ் சார்பில் செந்தில் நாதன் தயாரிப்பில் சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும் நல்ல கருத்துள்ள திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே. இப்படத்தின் ஒளியமைப்பாளராக திரு. பாண்டியன் குப்பன் பணிபுரிந்துள்ளார்.
மஸ்தான் காதர் இசையமைத்துள்ளார்.எடிட்டிங் பணிகளை குமரேஷ். கே. டி மேற்கொண்டுள்ளார். கலை இயக்கம் ராஜூ -வால் கையாளப்பட்டுள்ளது.மேலும் இப்படத்தை பல இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவ்வெல்களுக்கும் அனுப்பியுள்ளோம்.
மேலும் இப்படம் தந்தை மகளுக்கான பாசத்தோடு தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத்தின் வீரியத்தையும் ஒரு சேர சொல்லும் நல்ல கருத்துள்ள படமாக இப்படம் உருவாகியுள்ளது.
முழுவதும் முடிவடைந்து திரைக்கு தயாராக இருக்கும் இப்படம் மக்கள் பார்வைக்கு போவதற்கு முன்பே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இப்படம் பல விருதுகளை பெற்று இருக்கிறது.
ஆம் தற்போது அதில் முதல் விருது. ட்ருக் இன்டர்நேஷனல் பெஸ்டிவலில் வாங்கிய அவுட்ஸ்டேண்டிங் அக்சீவ்மெண்ட் விருதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம்
சின்னஞ்சிறு கிளியே ஹீரோ - செந்தில்நாதன்
ஹீரோயின் - சாண்ட்ரா நாயர்
Child artist - பதிவத்தினி செந்தில்நாதன்
Supporting artist - குலப்புலி லீலா,
செவ்வியல் கலைஞர் செல்லதுரை, விக்ரமாதித்யன், பாலாஜி சண்முகசுந்தரம், குரு, அர்ச்சனா சிங்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu