சகல தரப்பினர்களுக்கும் பிரியமான தயாரிப்பாளர் - தனஞ்ஜெயன் பிறந்த நாளின்று.

சகல தரப்பினர்களுக்கும் பிரியமான தயாரிப்பாளர் -  தனஞ்ஜெயன் பிறந்த நாளின்று.
X
ரசிகர் ஒவ்வொருவருடனும் நேரடி பரிச்சயம் கொண்டவர்.

சகல தரப்பினர்களுக்கும் பிரியமான தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பிறந்த நாளின்று

ஹாலிவுட்டோ அல்லது கோலிவுட்டோ பெரும் பாலான சினிமா ரசிகர்களுக்கு தயாரிப்பாளர்களின் முகம் அவ்வளவாக பரிச்சயம் இருக்காது.. ஆனால் இதில் விதிவிலக்காக ரசிகர் ஒவ்வொருவருடனும் நேரடி பரிச்சயம் கொண்டவர்தான் இன்னிய பர்த் டே மேன் தனஞ்செயன்..

இந்த தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவரான தனஞ்செயன், பல வடிவங்களில் தன் பயணத்தை ஆரம்பித்து நிர்வாக தயாரிப்பாளராக தனது திரையுலக அனுபவத்தை தொடர்ந்தார். பின்னர் தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார். பூ,கண்டேன் காதலை, காற்றின் மொழி, மிஸ்டர் சந்திரமவுலி, கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு உள்பட இதுவரை 30 படங்களை தயாரித்து இருக்கிறார். 2 தேசிய விருதுகளை பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

கொஞ்சம் விரிவாக விளக்கமாக சொல்வதானால் நிர்வாக தயாரிப்பாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய தனஞ்செயன், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பதோடு, ஒரு படத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், என்பதை அறிந்த தயாரிப்பாளர்களில் முக்கியமானவராகவும் திகழ்ந்து வருகிறார்.

தயாரிப்பாளராக மட்டும் இன்றி நல்ல சினிமா விமர்சகராகவும், யூடியூப் மூலம் அன்றாடம் ஹிட் நியூஸ் வழங்கும் தனஞ்செயன் ஃபாப்டா என்ற பெயரில் திரைப்பட பயிற்று மையம் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தற்போது ஃபாப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் (BOFTA MEDIAWORKS & Creative Entertainers) என்ற இரு நிறுவனங்கள் மூலம் நல்ல படங்களை தயாரித்து வெளியிட்டு வருபவர்,விரைவில் படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

முன்னொரு முறை தனஞ்செயனிடம் பேச்சு கொடுத்து அவர் சினிமாவுக்குள் வந்த வரலாறைக் கேட்டப் போது சொன்ன தகவல் இப்போ நம்ம #இன்ஸ்டாநியுஸ் வாசகர்களுக்காக பார்வைக்கு இதோ:

"எனக்கு சொந்த ஊர் செஞ்சி அகரம் என்ற குக்கிராமம். எங்கள் ஊரில் உள்ள டெண்ட் கொட்டகையில் படம் பார்ப்பது வாடிக்கை. தரை டிக்கெட், மணல் டிக்கெட் என்று பல இடங்களில் உட்கார்ந்து படம் பார்த்துருக்கேன். ஒவ்வொரு படம் பார்க்கும்போதும் அங்கே உள்ள் ஸ்கிரீனோடு ஐக்கியமாகிடுவேன். நிஜமா சொல்றதானா ஸ்கிரீன்ல ஹீரோ அழுதா நானும் அழுவேன்; ஹீரோ சிரிச்சா நானும் சிரிப்பேன். அன்னிக்கு தரை டிக்கெட்ல உட்கார்ந்து படம் பார்த்த நான் இப்போது சொந்தமா திரைப்படக் கல்லூரி, படம் தயாரிக்கிறேன் என்றால் படிப்புதான் மூலதனமாக இருக்குது.

அப்படி டைம் பாஸுக்காக படம் பார்த்தாலும் நான் கெட்டிக்கார ஸ்டூடண்ட். டிகிரி முடித்ததும் ஐதராபாத்தில் பிரபல பெயிண்ட் கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது எனக்கு 4500 சம்பளம். அது இன்றைய தேதிக்கு நான்கு லட்சம். பெயிண்ட் கம்பெனி பாஸ் என்னை மேல்படிப்பு படிக்க ஊக்கம் கொடுத்தார். சம்பளத்தை தாறுமாறா செலவு பண்ணாமல் சிக்கனமாகச் சேமித்து வைத்தேன். எம்.பி.ஏ படித்தேன். வீட்டுக்கு நான் கடைசிப் பையன். அப்போது என் அண்ணன்கள் நான் வாங்கிய சம்பளத்தில் சிறு பகுதிதான் வாங்கினாங்க.

அதனால் என் ஃப்யூச்சரை மனசில் வச்சி நான் வேலையை ராஜினாமா செய்ததற்கு வீட்டிலே கடும் எதிர்ப்பு.,மேற்படிப்புக்குப் பிறகு இன்னொரு பெயிண்ட் கம்பெனியில் மிகப் பெரிய வேலை கிடைத்தது. எனக்கு சேல்ஸ், மார்க்கெட்டிங் துறை ஒதுக்கப்பட்டது. என்னுடைய கடுமையான உழைப்பால் ஒவ்வொரு வருடமும் புரொமோஷன் வாங்கினேன். கை நிறைய சம்பாதிச்சாலும் சினிமாவை என்னால் மறக்க முடியவில்லை. என்னுடைய சினிமா வேட்கைக்கு தீனி போடும்விதமாக பெயிண்ட் கம்பெனியில் ரங்கோலி என்ற டைட்டிலில் டி.வி கான்செப்ட்டை டைரக்‌ஷன் பண்ணினேன்.

ஒரு விசயம் கவனிச்சேன்.. பெயிண்ட் கம்பெனியில் வேலை பார்த்ததற்காக இதைச் சொல்லலை. வண்ணங்களை வைத்தே பிறருடைய குணத்தை அடையாளம் காணலாம். ரஜினி சார், சிரஞ்சீவி சாருக்கு கறுப்பு ஃபேவரைட். கறுப்பு நிறம், செல்ஃப் கான்பிடன்ஸின் அடையாளம். வெள்ளை, எளிமையின் அடையாளம். எந்த சர்ச்சையிலும் சிக்கமாட்டார்கள். எனக்கு நீலம். இது கூல் கலர். பேலன்ஸ்டு கலர் என்று சொல்லலாம். நான் பண்ணிய அந்த நிகழ்ச்சி வெற்றி அடையவே சக அலுவலக நண்பர்கள் உற்சாகப்படுத்தி சினிமா பக்கம் போகச் சொன்னாங்க.

அதை ஒட்டி ரூட் விட்டு அப்போ பிரபல ஆடியோ நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் ஜாயின் பண்ணினேன்.. . 'அலைபாயுதே', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' உட்பட ஏராளமான படங்களின் ஆடியோவை நான் சார்ந்து இருந்த நிறுவனம் வெளியிட்டது. பாரதியார் பாடல்களை என் தனி முயற்சியில் ஆடியோ சிடியாக வெளியிட்டேன். பிரபல சாமியாரின் 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' ஆன்மிக சொற்பொழிவை நிழல்கள் ரவி குரலில் வெளியிட்டேன்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் கிரியேட்டிவிட்டி ஜாப் எனக்கு பிடிக்கும். இதுக்கிடையிலே தயாரிப்பாளர் தேனப்பன் என்னுடைய நீண்ட நாள் நண்பர். அவர் என்னை நேரடியாக படத் தயாரிப்புகளில் இறங்குமாறு உசுப்பேற்றினார். பிரபல கார்ப்பரேட் நிறுவனத்தின் மூலம் 'பூ', 'கண்டேன் காதலை', 'அவள் பெயர் தமிழரசி' உட்பட ஏராளமான படங்கள் எடுக்க ஆரம்பிச்சோம். இதில் என் அனுபவத்தில் வெற்றி தோல்வி என்பது சகஜம். ஹீரோ, டைரக்டர் என்று பக்காவாக டீம் சேரும்போது எல்லாமே நல்லாதான் தெரியும். தப்பு கதையில் எங்கேயோ நடந்திருக்கலாம். டைட்டிலால் கூட பாதிப்பு ஏற்படலாம்.மனிதர்களின் நாக்கு மாத்தி மாத்திப் பேசும். ஒரு சினிமா ரிலீஸாகிசந்தைக்கு வந்துவிட்டால் பலதரப்பட்ட விமர்சனம் வரும். அதைத் தவிர்க்க முடியாது. சினிமாவில் எளிதான விஷயம் அடுத்தவர்களை கேலி செய்வது. கஷ்டமான விஷயம் எல்லோரையும் திருப்திப்படுத்துவது.-அப்படீன்னு சொல்லி இருந்தார்

ஏகப்பட்ட திரைமறைவு செய்லகளைக் கொண்டு இயங்கும் இந்த திரையுலகில் நடப்பத்தை உள்ளது உள்ளபடி சொல்லி இத்துறையில் மேலும் மேலும் சிறக்க வேண்டும் என்ற பேரவா கொண்ட நம் தனஞ்செயன் -அவர்களுக்கு இன்ஸ்டா செய்தி குழுமம் சார்பில் ஹேப்பி பர்த் டே சொல்வதில் மகிழ்ச்சிதான்..


Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!