கார் உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: ஸ்க்ராபிங் திட்டத்தால் இன்சூரன்ஸ் குறையும்

கார் உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி:   ஸ்க்ராபிங் திட்டத்தால் இன்சூரன்ஸ் குறையும்
X

ஸ்க்ராப் செய்வதற்காக குவிக்கப்பட்டுள்ள கார்கள் (ஃபைல் படம் )

வாகன ஸ்க்ராபிங் திட்டத்தால் கார் இன்சூரன்ஸ் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வாகன அழிப்பு திட்டத்தினால் குறையும் கார் இன்சூரன்ஸ் பிரீமியம்

இந்தியாவில் சுற்றுச் சூழல் மாசைக் குறைக்கும் விதமாக 15 ஆண்டுகளுக்கும் மேலான வாகனங்களை சாலைகளில் ஓட்ட தடை விதிக்க சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசு குறைவதோடு, வாகனங்கள் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மூன்றாம் தரப்பு பிரீமியமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியாவில் பல ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறையினரின் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வந்த வாகன அழிப்பு திட்டம், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது வாகனத் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே வாகனத்துறை தொடர் சரிவினைக் கண்டு வந்த நிலையில், அரசின் இந்த அறிவிப்பு வாகன விற்பனையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய வாகனங்கள் அதிக அபாயகரமானவை மட்டுமல்லாமல், அதிக ஆபத்தையும் கொண்டுள்ளன. அவை அதிக மாசுபாட்டிற்கும் வழிவகுக்கும். இவைகளை தடுக்கும் வகையில் தான் வாகன அழிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது தனி நபர் வாகனங்களுக்கு 20 வருடங்கள் கழித்தும், வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகள் கழித்தும் ஸ்கிராப்பிங் செய்யும் திட்டம் விரைவில் அமலுக்கு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் வாகன துறையின் வருவாய் ரூ.4.5 லட்சம் கோடியில் இருந்து, ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் வாகன அழிப்புத் திட்டத்தில், பழைய வாகனங்களை ஸ்கிராப்பிங் செய்யும் கார் உரிமையாளர்களுக்கு 5 சதவீத சலுகை அளிக்க விற்பனையாளர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதோடு சாலை வரி மற்றும் பதிவு செலவுகளிலும் சலுகைகளை பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.


வாகன அழிப்புத் திட்டத்தினை அமல்படுத்துவதால், இன்சூரன்ஸ் துறையிலும் அதன் பாதிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காப்பீட்டாளர்கள் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செய்ய பாதுகாப்பான வாகனங்களையே விரும்புவார்கள். தற்போது மூன்றாம் தரப்பு உரிமைகோரல்கள் 140 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளன. இதில் முக்கிய பங்கு பழைய வாகனங்களுக்கே.

ஆகவே, பழைய வாகனங்களை அகற்றும்போது, இந்த உரிமைகோரல்கள் குறையும். இதனால் பிரீமியங்களின் அழுத்தம் குறையும். இனி வரும் காலங்களில் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் பிரீமியம் என்பது குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய வாகனங்களில் செலவுகள் குறையும் என்பதால், இது குறைந்த பிரீமியங்களுக்கு வழிவகுக்கும். மேலும் புதிய வாகனங்களால் விபத்துகள், மாசுக்கள் குறையும். இதனால் இன்சூரன்ஸ் பிரீமியங்களும் குறைய வாய்ப்புள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil