upi means in tamil-உடனடியா பணம் அனுப்பனுமா..? அப்படின்னா UPI பற்றி தெரிஞ்சுக்கங்க..!

upi means in tamil-உடனடியா பணம் அனுப்பனுமா..? அப்படின்னா UPI பற்றி தெரிஞ்சுக்கங்க..!
X

upi means in tamil-upi  பணப்பரிமாற்றம் (கோப்பு படம்)

upi means in tamil-பண பரிவர்த்தனையில் காலதாமதம் மற்றும் அலைச்சல் போன்றவைகளை தடுக்கும் விதமாக உடனடி பணப்பரிமாற்றம் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டதே இந்த நடைமுறை.

பண்டமாற்று முறை

upi means in tamil- ஒரு காலத்தில் பொருட்களை நாம் பண்டமாற்று முறையில் வாங்கிக்கொண்டோம். பின்னர் பணம் என்னும் மதிப்பு அளவீட்டு கருவி வந்தவுடன் பணப்பரிமாற்றம் மூலமாக பொருட்கள் மற்றும் வர்த்தகம் நடைபெற்று வந்தது. தற்போது அதன் வடிவம் அடுத்தகட்டத்தை நோக்கி மாறி எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாமும் அந்த வளர்ச்சிக்கு ஏற்ப மாறவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதனால் பல நன்மைகளும் உள்ளன என்பதை நாம் மறுக்கமுடியாது. அலைச்சல், காலவிரயம் போன்றவை இல்லாமல் போய்விட்டன.


வங்கித்துறை, வங்கி பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறான முயற்சிகளின் விளைவாக பணப்பரிமாற்றம் செய்வதற்கு கிடைத்த புதிய தொழில்நுட்ப வளர்ச்சியில் UPI ஒன்றாகும். அதாவது, ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (Unified Payments Interface). UPI இந்த வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது என்ன, எப்படிச் செயல்படுகிறது என்பது முழுமையாக நமக்குத்தெரியாது. இன்று Unified Payments Interface எனப்படும் UPI குறித்து விரிவாக பார்ப்போம் வாங்க.

upi means in tamil

UPI என்றால் என்ன?

ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு அதாவது Unified Payments Interface (UPI) என்பதாகும். இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (National Payment Corporation of India) மூலமாக விரிவுபடுத்தப்பட்ட ஒரு கட்டண முறையாகும். இந்த நடைமுறை இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையிலான உடனடிப் பணப் பரிவர்த்தனைக்கு வழிவகை செய்கிறது.

UPI என்ற இந்த புதிய நடைமுறை ஏற்கனவே உள்ள IMPS என்ற உள்கட்டமைப்பின் மீது புதிய கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் மூலம் 24 மணி நேரமும் உடனடியாகப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.


NPCI என்றால் என்ன?

இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் (NPCI) என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும். இது இந்தியாவில் சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துகிறது.

UPI எவ்வாறு வேலை செய்கிறது?

UPI என்ற நடைமுறை வங்கிக் கணக்கின் விவரங்களை நிரப்ப வேண்டிய அவசியமின்றி, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வாடிக்கையாளரின் இ மெயில் முகவரி (mail id) மூலம் ஒரு ஸ்மார்ட்போனில் பணத்தை அனுப்பவோ அல்லது பெறவோ அனுமதிக்கிறது. இதில் பரிவர்த்தனை உங்களின் குளோபல் அட்ரஸ் (உங்களின் கைப்பேசி எண் அல்லது ஆதார் எண்) மற்றும் லோக்கல் அட்ரஸ் (இ மெயில் ) அடிப்படையில் நடக்கிறது.

upi means in tamil

மெய்நிகர் முகவரி

மெய்நிகர் முகவரி என்பது ஒரு மின்னஞ்சல் முகவரியை ஒத்தது. உதாரணமாக xyz@hdfc. இதில் xyz என்பது பயனாளியின் பெயர் மற்றும் HDFC உங்கள் உங்கள் வங்கியாக இருக்கும். மெய்நிகர் முகவரிகள் உங்கள் வங்கிக் கணக்கின் எண்ணைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலான சிறந்த மாற்று வழியாகும். நீங்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் மெய்நிகர் முகவரிகளை உருவாக்கலாம்.

மேலும் இது மிகவும் பாதுகாப்பானது (பிட்காயின் பரிமாற்றங்களை ஒத்தது). UPI ல் இரண்டடுக்குப் பாதுகாப்பு முறை (2FA) பயன்படுத்தப்படுகிறது. அதாவது நீங்கள் ஒரு ATM ல் பணம் எடுக்கும்போது உங்கள் ATM கார்டு முதல் காரணியாகவும் உங்களின் பாஸ்வேர்ட் இரண்டாவது காரணியாகவும் செயல்பட்டு பணம் பெறுவதற்கு வழிவகை செய்கிறது. அதே போல இதில் NCPI ஆப் BHIM மூலம் UPI குறியீடும் வங்கிகள் மூலம் MPIN குறியீடும் தரப்படுகிறது.


UPI-PIN மற்றும் M-PIN என்பது என்ன? அதன் வேறுபாடு என்ன?

UPI- PIN என்பது 4-6 இலக்க குறியீடாக இருக்கும். இது BHIM பயன்பாட்டில் முதல் முறையாக நீங்கள் பதிவு செய்யும்போது உருவாக்கப்பட்டதாகும். UPI பரிமாற்றங்களை அங்கீகரிப்பதற்கு இந்தக் குறியீட்டை நீங்கள் பயன்படுத்தலாம். MPIN என்பதோ வங்கிகளால் தங்களது கைப்பேசி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது. இவை இரண்டில் உங்களது தேவை மற்றும் பயன்படுத்தும் ஊடகத்திற்கு ஏற்ப இரண்டையும் பயன்படுத்தலாம்.

upi means in tamil

BHIM என்பது என்ன?

BHIM (Bharat Interface for Money) UPI அல்லது சாதாரணக் கணக்குகளுக்குப் பரிவர்த்தனை செய்ய உதவுவது. பேலன்ஸ் மற்றும் ஏனைய தகவல்களுக்கும் இது பயன்படுகிறது. IMPS-ஐ பரிமாற்றத்தில் வங்கி எண் குறிப்பிடும் நேரத்தையும் விட இது விரைவானது.

அதிகபட்ச பரிவர்த்தனை வரையறை: தற்சமயம் அதிகபட்ச பரிவர்த்தனை வரையறை ஒரு லட்சமாக உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!