தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.50 வரை உயர்கிறது

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.50 வரை உயர்கிறது
X
குறைந்த விலை மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் விற்று தீர்ந்துவிட்டன. 200 ரூபாய்க்கு மேல் உள்ள மதுபானங்களை கட்டாயமாக விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காலத்தில் குவார்ட்டர் விலையில் 10, ஆஃப் 20, ஃபுல் 40, பீர் விலை 10 வீதம் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டது. அது போல தற்போதும் உயர்த்துவதற்கு திட்டமிட்டு உள்ளனர். குறைந்த ரக மதுவகைகளுக்கு 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபானங்களுக்கு 30 ரூபாயும், உயர்ரக மதுபானங்களுக்கு 50 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுபானங்களின் விலை உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். இதற்கிடையே குடோன்களில் தேங்கியுள்ள மதுபானங்களை விற்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள். விரைவில் மதுபானங்கள் விலையை அரசு உயர்த்த உள்ளதால் பழைய விலை மதுபானங்களை விற்பனை செய்து முடிக்க அனைத்து கடை மேற்பார்வையாளர்களுக்கும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதன் காரணமாக, குறைந்த விலை மதுபானங்கள் பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் விற்று தீர்ந்துவிட்டன. 200 ரூபாய்க்கு மேல் உள்ள மதுபானங்களை கட்டாயமாக விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மது அனைத்திற்கும் கேடு.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil