21 வயதில் இந்தியாவின் பணக்கார இளைஞர்கள்..!
Zepto நிறுவனர்கள்
இந்தியாவின் முதல் 100 பணக்காரர் பட்டியல் வெளிவந்த நிலையில், அதில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் சுவாரஸ்யமாக உள்ளன. அதாவது சுதந்திர இந்திய சுதேசி கொள்கையில், இந்திய தொழில் இந்தியர்களுக்கே வேண்டுமானால் அந்நியர்கள் "மேக் இன் இந்தியா" முலம் தொழில் செய்யலாம் என அறிவிக்கப்பட்ட பின் இந்தியர்களுக்கு வாய்ப்புகள் பெருகி நிற்கின்றன.
100 முதல் நிலை பட்டியலில் பல புதிய புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியிருக்கின்றார்கள். அவ்வகையில் அதானி முதலிடம் பிடித்திருக்கின்றார். சர்வதேச அரங்கில் அவர் செய்யும் தொழில்கள் அதிகம் அந்த அளவு இந்தியா ஆதிக்கம் செலுத்துகின்றது. இதனாலே சோர்ஸ் குழுமம் அவரை குறிவைத்து ஹின்டர்ப்ர்க் சர்ச்சையினை எழுப்பியது ஆனாலும் அதானி அசையவில்லை.
முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். மூன்றாம் இடத்தில் தமிழர் அதுவும் திருசெந்தூர் தமிழர் சிவநாடார் கம்பீரமாக நிற்கின்றார். இந்த பட்டியலில் மகேந்திரா குழுமமே 90ம் இடத்தில் இருக்கின்றது என்றால் புதிய புதிய தொழில்கள், தொழிலதிபர்கள் எவ்வளவு வளர்ந்திருக்கின்றனர் என்பதை அறியலாம்.
அவர்களில் அதிசயிக்க வைப்பவர்கள் கைவல்யா வோரா மற்றும் ஆதித் பலோச்சு. இவர்கள் இருவரின் வயதும் வெறும் 21 மற்றும் 22 மட்டுமே. இருவரும் இந்த பட்டியலில் 23ம் இடத்தில் இருக்கின்றார்கள்?. அப்படி என்ன தொழில் செய்தார்கள்? அதுதான் சந்தர்ப்பத்தை பயன்படுத்துவது. வியாபாரத்தில் காலநேரமும் மகா முக்கியம்.
இருவரும் ஸ்டான்போர்டுக்கு படிக்க சென்றார்கள். கணிப்பொறியியல் படித்தார்கள். ஆனால் படிக்க விருப்பமில்லை அல்லது வரவில்லை. படிப்பு வேண்டாம் என அவர்கள் முடிவெடுத்து விட்டு அரசியலுக்கோ சினிமாவுக்கோ வரவில்லை. மாறாக என்ன தொழில் செய்யலாம் என யோசித்தார்கள்.
அப்போது கொரோனா காலம் வந்தது. எல்லோரும் வீட்டுக்குள் முடங்கிய காலத்தில் அவர்கள் வீடுதேடி பொருள் கொடுக்கும் நிறுவனத்தை "Zepto India" என தொடங்கினார்கள். மளிகை போன்ற பொருட்களுக்கு அதிகம் 45 நிமிடம் உத்திரவாதம் என அவர்கள் நேரம் தவறாமை கடைபிடித்தது பெரிய அளவில் வெற்றியினை கொடுத்தது.
அவர்கள் தொழில் சரியாக வந்தது. தொடர்ந்து விரிவுபடுத்தினார்கள். தொழில் அமோகமாய் வந்து இன்று அமேசானை இந்தியாவில் கட்டுப்படுத்தும் அளவு வளர்ந்திருக்கின்றார்கள். இந்த இரு இளைஞர்கள்தான் இன்று மொத்த இந்தியாவினையும் உலகையும் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றார்கள்.
மாபெரும் சிமென்ட் நிறுவனம், பெரிய பெரிய தொழிற்சாலைகள், சுரங்க அதிபர்கள், பரம்பரை பணக்காரர்களை தாண்டி வெறும் 21 வயது வாலிபர்கள் இந்திய பணக்கார வரிசையில் வந்திருப்பது அதிசயம். இவர்கள் நடிக்கவில்லை. அரசியலில் இல்லை. போதை பொருள் கடத்தவில்லை. ஆனால் காலம், தொழில்நுட்பம், மக்களின் தேவை என மூன்றையும் கணித்து பெருவெற்றி பெற்றிருக்கின்றார்கள்.
இவர்கள் பெங்களூர் இளைஞர்கள். சரியாக காலத்தை கணித்து பெரிய இடம் பெற்றிருக்கின்றார்கள். பெரிய முதலீடு இல்லை, படிப்பில்லை, பின்புலமில்லை ஆனாலும் காலத்தை கணித்து அடித்து விட்டார்கள்.
அவர்கள் கணித்த கணிப்பு இந்த மளிகைபொருளை வீட்டுக்கு தரும் தொழிலில் இந்திய நிறுவனங்கள் இல்லை என்பது, மாபெரும் சந்தையினை பெரிய நிறுவனங்கள் கோட்டை விட்டிருந்தன. அதனை வெளிநாட்டு இணையதள வியாபார கம்பெனிகள் கைபற்றப் பார்த்தன. அப்படி மாபெரும் சந்தையினை அன்னியருக்கு கொடுக்காமல் மோடி அரசு காவல் காத்தது. அந்த காவலில் இவர்கள் எழுந்து விட்டார்கள்.
இனி இவர்கள் இந்தியாவில் பெரிதாக வளர்ந்து அக்கம் பக்கம் நாடுகளில் கால்வைப்பார்கள். மாபெரும் இடத்தை இவர்களின் நிறுவனம் அடையும். ஆக மோடி அம்பானிக்கும் அதானிக்கும் மட்டுமல்ல, இங்கே உழைத்து முன்னேற விரும்பும் எல்லா இந்தியருக்கும் வாய்ப்பை வழங்குகின்றார். அதை பயன்படுத்தியவன் வளர்கின்றான் பயன்படுத்தாதவன் 200 ரூபாய்க்காக அழுது கொண்டிருக்கின்றான். இந்த தமிழகம் இப்படி கிடக்க கன்னட இளைஞர்கள் சாதித்திருகின்றார்கள். எப்படி இப்படி ஆயிற்று? தன்னை சுற்றிலும் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu