சில்லறை பணவீக்கம் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு!

சில்லறை பணவீக்கம் 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு!
X
சில்லரை பணவீக்கம் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது.

பொதுவாகவே மோடி அரசு மீது வைக்கப்படும் புகார்களில் முதன்மையானது உணவுப்பொருட்களின் விலை உயர்வு தான். குறிப்பாக அனைத்து உணவுப்பொருட்களின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்து விட்டன. இந்த விலை உயர்வால் நடுத்தர, அடித்தட்டு மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

வரும் இருபத்தி மூன்றாம் தேதி மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்புகள் மூலம் உணவுப்பொருட்களின் விலை உயர்வு கட்டுக்குள் வருமான என்ற எதிர்பார்ப்பு எழுந்தள்ளது. தவிர இன்னொரு மிகப்பெரிய குற்றச்சாட்டு உள்நாட்டில் விளையும் தரமான உணவு, மீன மற்றம் மாமிச பொருட்களையும், விவசாய வி ளைபொருட்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டு, விளைவிக்கும் உள்நாட்டு மக்களை சாப்பிட விடாமல் செய்கிறார்கள் என்ற கடும் புகாரும் இருந்து வருகிறத. இந்த புகாரில் கூறப்பட்டுள்ள அனைத்தும் உண்மை என்பது போல் ஒரு தரவுகள் வெளியாகி உள்ளது. அதனை பார்க்கலாம்.

உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பால், அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான நாட்டின் சில்லறை பணவீக்கம் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த ஓராண்டில் குறைந்த அளவாக சில்லறை பணவீக்கம் கடந்த மே மாதம் 4.75 சதவிகிதமாக இருந்த நிலையில், ஜூன் மாதம் 5.08 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஊரகப் பகுதிகளில் 5.66 சதவிகிதமாகவும், நகர்ப்புறப் பகுதிகளில் 4.39 சதவிகிதமகவும் அதிகரித்துள்ளது. உணவு பொருள்களின் பணவீக்கம் 9.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட 2 - 6 சதவிகித வரம்புக்குள் சில்லறை பணவீக்கம் இருந்த போதிலும், 4 சதவிகித அளவை தாண்டி இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாய் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil