பொதுத்துறை வங்கிகளின் பங்கு மதிப்பு உயர்வு..!

பொதுத்துறை வங்கிகளின்  பங்கு மதிப்பு உயர்வு..!
X

மும்பை பங்குச் சந்தை (கோப்பு படம்)

பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் உயர்வால் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது சென்செக்ஸ், நிஃப்டி.

டெக் நிறுவனங்கள் கடந்த வாரம் தங்களின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டன. இதை தொடர்ந்து இந்த வாரம் பல நிறுவனங்கள் தங்களின் காலாண்டு முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளன.

கடந்த சில அமர்வுகளாக இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் தொடர்ந்து மேல்நோக்கி பயணித்து வருகிறது. நிஃப்டி டாப் 50 பங்குகள் ஜூலை 15ஆம் தேதியன்று முதல் முறையாக 24,600ஐ கடந்தது சாதனை படைத்தது.

டெக் துறைகளில், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் அதிக அளவில் அன்னிய முதலீடுகள் ஈர்த்து வருவதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்றைய வர்த்தகத்தில் முடிவில் புதிய உச்சத்தில் முடிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 145.52 புள்ளிகள் உயர்ந்து 80,664.86 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச் சந்தை 84.55 புள்ளிகள் உயர்ந்து 24,586.70 என்ற புதிய சாதனை உச்சத்தை எட்டியது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, என்டிபிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மறுபுறம் ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், டெக் மஹிந்திரா மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை சரிந்து முடிந்தது.

ஆசிய சந்தைகளில், சியோல் மற்றும் ஷாங்காய் உயர்ந்தும், ஹாங்காங் சரிந்தும் முடிவடைந்தது. ஐரோப்பிய சந்தைகள் சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் (வெள்ளிக்கிழமையன்று) ஏற்றத்தில் முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ.4,021.60 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.18 எட்டு சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 85.15 டாலராக உயர்ந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!