தங்கத்தின் விலை எப்போ குறையும்..?
தங்க நகைகள் (கோப்பு படம்)
நகை செய்யும்போது செம்பு சேர்ப்பது என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் 8 கிராம் தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக 6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது. ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக செம்பையும் சேர்த்து தங்கத்தின் விலைக்கே பில்லில் போடுகின்றார்கள்.
அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள். இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம்.
ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள். ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள்
ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது? இந்த தங்கத்திலும் பல குளறுபடிகள் உள்ளன. 6.5 கிராம் தங்கத்திற்கு பதிலாக 5 கிராம் தங்கம் சேர்த்து மீதம் வேறு உலோகம் சேர்த்து விற்கப்படும் நகைகளும் உண்டு. இதனால் தான் நகைக்கடைக்காரர்கள் கல்லா மேல்... கல்லா கட்டுகிறார்கள்.
நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!
இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ?
ஒரு பவுனுக்கு 3 கிராம் செம்பினை தங்கத்தின் விலைக்கே என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ? கணக்கு போட்டு பாருங்கள்.
1 கிராம் தங்கம் ரூ. 4760/-
8 கிராம் தங்கம் ரூ. 38,080/-
1 கிராம் செம்பு - 4.80
1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-
6.5 கிராம் தங்கம் - 30940/-
6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு
அடக்கவிலை-30940+7.2=30947.2/-
1 பவுனுக்கு தங்கத்தில் - 38080 - 30940
லாபம்= 7140
சேதாரம் 1.5 கிராம் = 7140/-
1 பவுனுக்கு மொத்த லாபம் 14280
என்ன தலை சுத்துதா ?
இந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu