ஆன்லைன் மோசடி : ஏமாறும் எல்.ஐ.சி பாலிசிதாரர்கள்
எல்.ஐ.சி., சென்னை கட்டிடம்
ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் எல்.ஐ.சி. பாலிசிதாரர்களை ஏமாற்ற துவங்கி இருப்பது எல்.ஐ.சிக்கு தெரிய வந்துள்ளது. அதனால், பாலிசிதாரர்களை கவனமாக இருக்க நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. ஆன்லைன் மூலமாக, மக்களிடமிருந்து பணத்தை ஏமாற்றி பறிக்கும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.அந்த வகையில், மோசடிக்காரர்கள் தற்போது எல்.ஐ.சி.பாலிசிதாரர்களிடமும் கைவரிசையை காட்டத் துவங்கி இருக்கின்றனர். எல்.ஐ.சி., அலுவலகத்தில் இருந்தோ அல்லது காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையத்திலிருந்தோ பேசுவதாக கூறி, ஏமாற்ற முயற்சி செய்கிறார்கள்.
கைவசம் இருக்கும் பாலிசியை சரண்டர் செய்துவிட்டு, அதிக வருவாய் தரும் பாலிசிக்கு அதை மாற்றிக் கொள்ளலாம் என, ஆசை காட்டுகின்றனர். அவர்களிடம் தகவல்களை பெற்று, பணத்தை சுருட்டி விடுகிறார்கள். எனவே, சரண்டர் செய்தால், அதிக பணம் பெற்று தருகிறோம் என்று யார் போன் மூலம் தொடர்பு கொண்டாலும் போலீசுக்கோ அல்லது எல்.ஐ.சி அதிகாரிகளையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். ஏமாறாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் தற்போது செயல்பாட்டில் இருக்கும் பாலிசிகளை சரண்டர் செய்யச்சொல்லி எல்.ஐ.சி ஒருபோதும் கேட்காது என்றும் தெரிவித்து உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu