நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா உயர்வு: ஒரு முட்டை விலை ரூ.4.85

நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா உயர்வு: ஒரு முட்டை விலை ரூ.4.85
X
நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை 20 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.4.85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம், அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.65 ஆக இருந்த முட்டை விலை, 20 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை 485, பர்வாலா 522, பெங்களூர் 495, டெல்லி 555, ஹைதராபாத் 465, மும்பை 520, மைசூர் 497, விஜயவாடா 479, ஹொஸ்பேட் 455, கொல்கத்தா 535.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.105 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.80 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
ai based agriculture in india