Moonlighting meaning in tamil-அது என்னங்க "மூன்லைட்டிங்"..? தெரிஞ்சுக்குவோமா..?

Moonlighting meaning in tamil-அது என்னங்க மூன்லைட்டிங்..? தெரிஞ்சுக்குவோமா..?
X

Moonlighting meaning in tamil-மூன்லைட்டிங் விளக்கம் (கோப்பு படம்)

அண்மைக்காலமாகவே மூன்லைட்டிங் குறித்த செய்திகளும் விவாதங்களும் நடைபெற்று வருவதை நாம் அறிந்திருப்போம். மூன்லைட்டிங் என்பது குறித்து அறிந்துகொள்ளலாம்.

Moonlighting meaning in tamil

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், ஐபிஎம், டிசிஎஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள், மூன்லைட்டிங் விவகாரம் தொடர்பாக தங்கள் ஊழியர்களை எச்சரிக்கை செய்திருந்தன. இதில் விப்ரோ நிறுவனம் இந்த விவகாரத்தில் ஈடுபட்ட தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 300 ஊழியர்களை பணி நீக்கமும் செய்தது.

Moonlighting meaning in tamil


இந்த சூழலில் மூன்லைட்டிங் (Moonlighting) என்றால் என்ன? என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வோம் வாங்க.

இந்த மூன்லைட்டிங் தொடர்பாக ஒவ்வொரு நிறுவனத்தின் கருத்துகள் வெவ்வேறாக உள்ளன. சில நிறுவனங்கள் இதனை ஆதரிக்கின்றன. சில நிறுவனங்கள் கூடவே கூடாது என திட்டவட்டமாக மறுக்கின்றன. அதோடு இது தொழில் தர்மத்திற்கு எதிரானது எனவும் அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அடடா.. முதல்ல மூன் லைட்டிங்னா என்னனு சொல்லுங்கப்பா. அப்புறம் மத்ததை பேசுங்க என்று நீங்கள் கொந்தளிப்பது தெரிகிறது.சரி மேட்டருக்கு வருவோம்.

Moonlighting meaning in tamil


மூன்லைட்டிங் என்றால் என்ன?

ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் அந்த நிறுவனத்திற்கு தெரியாமல் பிற நிறுவனங்களுக்காகவும் பணியாற்றி வருவதைத் தான் மூன்லைட்டிங் எனச் சொல்கிறார்கள். அதாவது தெரியாமல் செய்வது. (நிலவொளியில் செய்தால் தெரியாதாம்-அதான் மூன் லைட்டிங்ன்னு பேர் வச்சிருக்காங்க)

இதனை இப்படியும் கூறலாம். அதாவது ஒரு வேலையில் இருந்து கொண்டே இன்னொரு வேலை செய்வது எனவும் சொல்லலாம். இது கூடுதல் வருவாய், ஆதாயம் கொடுக்கும். அமெரிக்காவில் இது பிரபலம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவிய சூழலில் சில ஊழியர்கள் அவர்கள் பார்த்து வந்த வேலையை இழந்தனர். பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பிடித்தம் மேற்கொள்வது போன்ற நடவடிக்கையை பின்பற்றியது.

Moonlighting meaning in tamil


அதன் காரணமாக ஊழியர்கள் மற்றொரு நிறுவனத்திற்காக பணியாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகினர். முக்கியமாக வீட்டிலிருந்து பணியாற்றி வந்த காரணத்தால் அவர்கள் அந்த வேலையை செய்ய எந்தவிதமான இடையூறும் இல்லாமல் இருந்தது.

ஊழியர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்க முடியாத நிறுவனங்கள் ‘மூன்லைட்டிங்’ பணியில் ஈடுபட அனுமதி அளித்தன. அதே நேரத்தில், சில நிறுவனங்கள் போட்டி நிறுவனங்களில் அந்த பணி கூடாது என ஒப்பந்தத்தில் தெரிவித்துவிடும்.

Moonlighting meaning in tamil

வரி விஷயத்தில் கவனம்

வரி விஷயத்தை பொறுத்த வரையில் மூன்லைட்டிங் மூலம் கிடைக்கும் வருமானம் அந்த ஊழியரின் மொத்த வருமானத்தில் சேர்க்கப்படும். குறைந்த அளவில் வரியை செலுத்தும் நோக்கில் சில ஊழியர்கள் இதனை தொழில்முறை அசைன்மென்ட்டுகளாக இந்த வேலையை செய்வார்கள்.


மூன்லைட்டிங் மூலம் கிடைக்கும் வருமானம் சார்ந்து வரி வசூலிப்பது தொடர்பான விதிகள் எதையும் இந்திய வருமான வரித்துறை கொண்டிருக்கவில்லை. அதனால், இது வழக்கமான ஊதியம், ஒப்பந்த கட்டணம், தொழில்முறை கட்டணம் போன்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

அதனால், TDS பிடித்தம் மட்டும் இதில் இருக்கும். அதுவே இதன் மூலம் கிடைக்கும் ஊதியம் 50 லட்ச ரூபாயை தாண்டும் போது கூடுதலாக வரி செலுத்த வேண்டி இருக்கும் என வருமான வரி சார்ந்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் மூன்லைட்டிங் பணியை செய்து வரும் ஊழியர்கள் தாங்கள் வேலை பார்த்து வரும் நிறுவனம் மட்டுமல்லாது வருமான வரி விஷயத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

Tags

Next Story