வீட்டுக் கடன்: நிலையான வட்டி ஃப்ளோட்டிங் வட்டி.. எது சிறந்தது?

பொதுவாக ஹோம் லோன் வாங்கக்கூடிய அனைவரிடமும் இருக்கக்கூடிய மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று கடனை நிலையான வட்டியில் (Fixed interest rate) வாங்க வேண்டுமா?
அல்லது ஃப்ளோட்டிங் வட்டிக்கு (Floating interest rate) வாங்க வேண்டுமா என்பது தான். இந்த இரண்டிற்கும் இடையில் இருக்கக்கூடிய வித்தியாசங்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அதன் மூலமாக நீங்கள் சரியான முடிவு எடுப்பதற்கு இது உதவலாம்.
இரண்டிற்கும் இடையேயான வித்தியாசம் என்ன? இதில் அதிக பலன் இருக்கிறது? நிலையான வட்டியை பொருத்தவரை நீங்கள் கடன் வாங்கும் சமயத்தில் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. உங்கள் கடன் முடியும் வரை அந்த வட்டியே உங்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. ஃப்ளோட்டிங் வட்டியில் வட்டி விகிதமானது சந்தை நிலவரங்களை பொருத்து மாறுபடும்.
நிலையான வட்டி விகிதம் என்பது என்ன?
நிலையான வட்டி விகிதம் என்பது நீங்கள் லோன் தொகை வாங்கும் பொழுது நிர்ணயிக்கப்படக்கூடிய ஒரு நிலையான வட்டியாகும். மார்க்கெட்டில் எந்தவிதமான ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டாலும் உங்களது ஹோம் லோனுக்கான வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. இதன் மூலமாக நீங்கள் எவ்வளவு தொகையை திருப்பி செலுத்த வேண்டும், உங்களது லோன் கால அளவு மற்றும் EMI போன்றவற்றை நீங்கள் எளிதாக நிர்ணயித்து விடலாம்.
ஒருவர் எப்போது நிலையான வட்டியில் ஹோம் லோன் எடுக்க வேண்டும். நீங்கள் செலுத்தக்கூடிய EMI தொகையில் உங்களுக்கு திருப்தி இருக்க வேண்டும். இந்த தொகை உங்களது மாத வருமானத்தில் 25-30 சதவீதத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
வட்டி விகிதங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என்று நீங்கள் எதிர்பார்க்கும் சமயத்தில், தற்போதைய வட்டி விகிதத்தை லாக் செய்ய நினைக்கும் பொழுது நீங்கள் நிலையான வட்டியை பெறலாம்.
நிலையான வட்டி விகிதத்தை தேர்ந்தெடுத்து விட்டால் கடன் பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு செலுத்த வேண்டும் என்று ஒரு ஐடியா கிடைத்து விடும். இதன் மூலமாக எதிர்கால பொருளாதாரத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம்.
ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் என்பது என்ன?
ஃப்ளோட்டிங் வட்டியில் வட்டி விகிதமானது சந்தை நிலவரத்தை பொறுத்து முடிவு செய்யப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பென்ச்மார்க் விகிதத்தின் அடிப்படையில் இந்த வட்டி நிர்ணயிக்கப்படும். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா பாலிசி விகிதங்களை அதிகரித்த பிறகு வங்கிகளும் அவர்களது விகிதங்களை அதிகரிப்பார்கள். இதன் காரணமாக லோன்களுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படலாம். இதுவே ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா பாலிசி விகிதங்களை அதிகரிக்காவிட்டால், வங்கிகளும் அவர்களது விகிதங்களில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
ஒருவர் எப்போது ஃப்ளோட்டிங் வட்டி மூலமாக வீட்டு கடன் வாங்க வேண்டும்.
எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக நீங்கள் கணித்தால் தாராளமாக உங்களது வீட்டுக் கடனை ஃப்ளோட்டிங் வட்டியில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலமாக நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை குறையும். ஃப்ளோட்டிங் வட்டி விகிதங்கள் பெரும்பாலும் நிலையான வட்டியை காட்டிலும் குறைந்த வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன.
ஹோம் லோனுக்கான வட்டி விகிதங்கள்: SBI, ICICI, BoB, PNB
பேங்க் ஆஃப் பரோடா- 8.40% - 10.65%
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா- 8.40% - 10.15%
ICICI வங்கி- 8.95%-9.15%
பஞ்சாப் நேஷனல் வங்கி 8.5% to 9% இப்போ நீங்களே முடிவு எடுங்க....
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu