மார்ச் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.78 லட்சம் கோடி..!

மார்ச் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.78 லட்சம் கோடி..!
X

மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் (கோப்பு படம்)

நாட்டின் ஜிஎஸ்டி வசூல் ஆண்டு தோறும் 11.5% சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது.

2023-24 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.20 லட்சம் கோடியை தாண்டி ரூ. 20.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய மைல்கல் ஆகும், இந்த வளர்ச்சி முந்தைய ஆண்டை விட 11.7% அதிகமாகும்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஜிஎஸ்டி வருவாய் விவரங்களை பார்க்கலாம்.

மகாராஷ்டிரா - 27,688 கோடி

கர்நாடகா - 13,014 கோடி

குஜராத் - 11,392 கோடி

தமிழ்நாடு - 11,017 கோடி

ஹரியானா - 9,545 கோடி

உத்தரபிரதேசம் - 9,087 கோடி

டெல்லி - 5,820 கோடி

மேற்கு வங்கம் - 5,473 கோடி

தெலுங்கானா - 5,399 கோடி

ஒடிசா - 5,109 கோடி

ராஜஸ்தான் - 4,798 கோடி

ஆந்திரப் பிரதேசம் - 4,082 கோடி

மத்திய பிரதேசம் - 3,974 கோடி

ஜார்கண்ட் - 3,243 கோடி

சத்தீஸ்கர் - 3,143 கோடி

கேரளா - 2,598 கோடி

பஞ்சாப் - 2,090 கோடி

பீகார் - 1,991 கோடி

அசாம் - 1,543 கோடி

உத்தரகாண்ட் - 1,730 கோடி

இமாச்சல பிரதேசம் - 852 கோடி

ஜம்மு & காஷ்மீர் - 601 கோடி

கோவா - 565 கோடி

சிக்கிம் - 303 கோடி

மேகாலயா - 213 கோடி

அருணாச்சல பிரதேசம் - 168 கோடி

திரிபுரா - 121 கோடி

நாகாலாந்து - 83 கோடி

மணிப்பூர் - 69 கோடி

மிசோரம் - 50 கோடி

ஆக நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூலில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜி.எஸ்.டி., வசூல் மட்டும் 30.50 லட்சம் கோடியை எட்டி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் ஒட்டுமொத்த இதர வருவாய் இனங்களை ஒப்பிட்டால், இந்தியா உலகின் 3வது பொருளாதாரமாக 2027ம் ஆண்டில் உருவாகி விடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story