தங்கம் விலை எப்போ குறையும்..? நிபுணரின் விளக்கம்..!
gold rate today in tamil-பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் (கோப்பு படம்)
Gold Rate Today in Tamil, Economist Anand Srinivasan, Gold Rate Today,
தங்கம் விலை கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கண்ணாமூச்சி காட்டுவதுபோல இறங்குவது கொஞ்சம் ஏறுவது திடீர் பாய்ச்சல் என்ற நிலையில் இருந்து வருகிறது.
தங்கம் விலை அதிகரிப்பதற்கு காரணம்தான் என்ன? இது இனி வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். அவர் தங்கம் விலை குறித்து மட்டுமல்லாமல் தங்க பத்திரங்கள் குறித்தும் சில விளக்கங்களை அவரது யூ ட்யூப் சேனலில் கூறியுள்ளார்.
Gold Rate Today in Tamil
அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போமா..?
மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு குறைந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாக மெல்ல மேல்நோக்கி ஏறி வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு கிராம் தங்கம் ரூ.200க்கு மேல் உயர்ந்துள்ளது. விலை உயர்வுக்கு காரணம் என்ன என்பதை பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் விளக்கியுள்ளார்.
அவர் தனது யூடியூப் சேனில் இவ்வாறு கூறியுள்ளார், "அமெரிக்காவில் பணவீக்கம் குறித்த ரிப்போர்ட் வெளியானது. அதாவது 3சதவீதத்தில் இருந்து 2.9சதவீதத்துக்கு குறைந்துள்ளது. அனைவரும் 2.5சதவீதம் அல்லது 2.4சதவீதம் வரை செல்லும் என்று நினைத்து இருந்தார்கள்.
ஆனால், அந்தளவுக்கு எல்லாம் குறையவில்லை. 2.9சதவீதத்துக்கு மட்டும் குறைந்துள்ளது. ஆனால், இது குறைந்ததால் செப். மாதம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பிற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தி இருக்கிறது.
Gold Rate Today in Tamil
இதன் காரணமாகவே இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்ந்தன. தங்கம் விலை கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரித்து வருகிறது" என்றார். அதாவது அமெரிக்க மத்திய வங்கி வரும் செப். மாதம் வட்டியைக் குறைக்கலாம். அப்படி வட்டி குறைந்தால் தங்கம் விலை சட்டென அதிகரிக்கத் தொடங்கும்.
தங்கப் பத்திரங்கள்:
தங்கப் பத்திரங்களை பொறுத்தவரை சமீபத்தில் பிரபல செய்தி நிறுவனம் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தங்க பத்திரங்கள் மிகப் பெரிய ஒரு தோல்வி திட்டம் என்று குறிப்பிட்டுளளது. ரூ.7000 கொடுத்துத் தங்கப் பத்திரங்களை அரசு திரும்ப வாங்குவது மிகப் பெரிய நஷ்டம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இறக்குமதி வரி குறைப்பால் மதிப்பு 6சதம் குறைந்த பிறகும் கூட வட்டியாகவே 20சதவீதம் போய்விட்டது என்றே நான் நினைக்கிறேன்.
உண்மையில் தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்கவே அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தது. அதாவது மக்கள் தங்கத்திற்குப் பதிலாக இந்த தங்கப் பத்திரங்களை வாங்குவார்கள் என்பது அரசின் எண்ணமாக இருந்தது.
Gold Rate Today in Tamil
இதன் மூலம் தங்க இறக்குமதி குறையும் என நினைத்தது. ஆனால், நடந்தததோ வேறு.. அதாவது மக்கள் வங்கியில் போட்டுவைத்திருக்கும் பணத்தை எடுத்துத் தங்கப் பத்திரங்களை வாங்கினார்கள். அதனால் அவர்கள் தங்கம் வாங்குவதை நிறுத்தவில்லை. தங்கத்தைத் தொடர்ந்து வாங்கிக் கொண்டே இருந்தார்கள்.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை விலை அதிகமாக இருந்ததால் மட்டும் தங்கம் இறக்குமதி 4சதம் வரை குறைந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் சென்னையில் முறைகேடாகத் தங்கக் கடத்தலில் ஈடுபட்டோரைக் கூட பிடித்தார்கள்.
Gold Rate Today in Tamil
இப்போது இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால் தங்கக் கடத்தல் குறையும். ஆனால், தங்கம் இறக்குமதி செய்வது தொடர்ந்து அதிகரிக்கும். தங்க இறக்குமதி குறைய வேண்டும் என்றால் வங்கிகள் மக்களின் சேமிப்பிற்கு நியாயமான வட்டியைக் கொடுக்க வேண்டும்.
அப்போ எப்போதுதான் குறையும்?
பணவீக்கம் 7சதமாக இருந்தால் வங்கிகள் குறைந்தது 9சத வட்டி தர வேண்டும். ஆனால், அப்படித் தர வேண்டும் என்றால் கடனுக்கான வட்டியும் அதிகரிக்கும். கடனுக்கான வட்டி அதிகரித்தால் பொருளாதார வளர்ச்சி குறையும் என அரசு நினைப்பதால் இதைச் செய்யாமல் இருக்கிறார்கள்.இதனாலேயே மக்கள் வங்கியில் பணத்தைப் போடுவதற்குப் பதிலாகத் தங்கத்தை வாங்குகிறார்கள்" என்றார், ஆனந்த் ஸ்ரீனிவாசன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu