ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்வு..!

ஒரே நாளில் 2 முறை தங்கம் விலை உயர்வு..!
X

தங்கம் விலை (கோப்பு படம்)

தங்கம் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நடுத்தர மக்களின் சேமிப்பு முதலீடாக விளங்குவதில் எப்போதுமே தங்கம் முதலிடத்தில் இருந்து வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. ஆனால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போருக்கு பின்னர் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலையை விட 20ரூபாய் அதிகரித்து 5305 ரூபாய்க்கும் நேற்று காலை விற்பனையானது. இந்நிலையில் இரண்டாவது முறையாக 65 ரூபாய் மீண்டும் அதிகரித்து 5370 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 42440 ரூபாய்க்கும் காலை விற்பனையானது. மீண்டும் தங்கம் விலை உயர்ந்த நிலையில் 520 ரூபாய் அதிகரித்து 42960 ரூபாய்க்கு தற்பொழுது விற்பனையாகிறது. இதன்மூலம் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 680 உயர்ந்துள்ளது.

அதே போல் காலையில் வெள்ளி ஒரு கிராம் 1 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து 74.50 காசுகளுக்கு விற்பனையான நிலையில், மீண்டும் 50 காசுகள் உயர்ந்து 75 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடைபெறுவதால் தங்கம் விலை இவ்வாறு அதிரடியாக உயர்ந்துள்ளதாக தங்க வியாபாரிகள் சங்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story