தங்கம் விலை தொடர் உயர்வு: 2 நாட்களில் பவுனுக்கு ரூ.712 அதிகரிப்பு
தங்க ஆபரணங்கள் (மாதிரி படம்)
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் உயர்ந்திருந்தது. நேற்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 452 ஆகவும், பவுனுக்கு ரூ.264 அதிகரித்து ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 616 ஆகவும் அதிகரித்திருந்தது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.56 ம், பவுனுக்கு ரூ.448 ம் அதிகரித்திருந்தது. இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் இதன் விலை கிராமுக்கு ரூ.89 ம், பவுனுக்கு ரூ.712 ம் அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை இந்த 2நாட்களில் இப்படி திடீரென உயர்ந்ததற்கு கொரோனா தொற்று குறித்த அச்சமும், லாக்டவுன் குறித்த பயமும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக சாமான்ய மக்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை அனைவரும தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே தங்கம் விலை உயர்வுக்கு காரணம்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ரூ.34 ஆயிரத்துக்கும் கீழ் ரூ.33 ஆயிரத்து 904 ஆக இருந்த தங்கத்தின் விலை அடுத்த நாளே ரூ.34 ஆயிரத்தை தாண்டியது. அடுத்து 8 நாட்களில் 9 ம் தேதியன்று ரூ.35 ஆயிரத்தை தாண்டியது. அதற்கடுத்த 2நாட்கள் மீண்டும் சற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை 12 ம் தேதியன்று மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியிருந்தது.
அதற்கடுத்து அதிக மாற்றமின்றி இருந்த தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களில் ரூ.700 க்கு மேல் அதிகரிததது. இது சாமான்ய மக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. இந்த விலை உயர்வு நீடித்தால் இனி தங்கத்தை நினைத்துப் பார்க்கவே முடியாது என்று கூறியுள்ளார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போதே ரூ.43 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை, அதிக வீரி யத்துடன் வந்துள்ள இரண்டாவது அலையின் போது எந்தளவு உயருமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஏனெனில் ஏற்கனவே, இந்த கொரோனா நடுத்தர வர்க்கத்தினரை ஏழ்மைக்கு தள்ளும் சூழ்நிலையில், தங்கம் விலை அதிகரித்துள்ளது நடுத்தர மக்களுக்கு தங்கம் எட்டாக் கனியாக போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu