தங்கம் விலை மீண்டும் உயர்வு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.448 அதிகரித்தது

தங்கம்  விலை மீண்டும் உயர்வு:  ஒரே நாளில் பவுனுக்கு ரூ.448 அதிகரித்தது
X

தங்க நகைகள் (மாதிரி படம் )

தங்கம் விலை மீண்டு உச்சம் தொட்டுள்ளது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.448 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்ந்து பவுன் ரூ.35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.56 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 419 ஆகவும், பவுனுக்கு ரூ.448 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது.

தேர்தல் முடிந்த மறுநாளே தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.300 க்கு மேல் அதிகரித்திருந்தது. 7 ம் தேதியன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 297 ஆகவும், பவுனுக்கு ரூ. 320 அதிகரித்து ஒரு பவுன் ரூ.34 ஆயிரத்து 376 ஆகவும் அதிகரித்துள்ளது. அந்த ஒரு வாரத்தில் கிராமுக்கு ரூ.172 ம், பவுனுக்கு ரூ.1,376 ம் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கடுத்து படிப்படியாக அதிகரித்த தங்கத்தின் விலை, நேற்று அதிரடியாக கிராமுக்கு ரூ.56 ம், பவுனுக்கு ரூ.448 ம் அதிகரித்துள்ளது.


கடந்த ஆண்டில் தங்கத்தின் விலைகிட்டத்தட்ட ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. அச்சமயம் தொழில்துறையில் நிலவிய தேக்கத்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவு முதலீடு செய்தது, விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியதும் தங்கம் விலை கணிசமாக குறைந்து ரூ.33 ஆயிரத்தில் நீடித்து வந்தது. தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், தொழில்துறை ஆட்டம் காணுகிறது. முதலீட்டாளர்கள் மீண்டும் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது திசைத் திருப்பியுள்ளனர். இதனால், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 735 ஆகவும், பவுனுக்கு ரூ.37 ஆயிரத்து 880 ஆகவும் இருந்தது. 6 ம் தேதியன்று கிராம் ரூ.4 ஆயிரத்து 885 ஆகவும், பவுன் ரூ. 39 ஆயிரத்து 80 ஆகவும் உயா;ந்திருந்தது. அடுத்த ஒரு வாரத்தில் 13 ம் தேதியன்று தங்கத்தின் விலை கிராம் ரூ.4 ஆயிரத்து 662 ஆகவும், பவுன் ரூ.37 ஆயிரத்து 296 ஆகவும் குறைந்தது, மேலும் தங்கத்தின் விலை பவுன் விலை மேலும் குறைந்து ரூ.37 ஆயிரத்துக்கு கீழே குறைந்த தங்கத்தின் விலை கிராம் ரூ.4 ஆயிரத்து 617 ஆகவும், பவுன் ரூ.36 ஆயிரத்து 936 ஆகவும் குறைந்திருந்தது. ஜனவாp மாத இறுதியில் மீண்டும் கிராம் ரூ.4 ஆயிரத்து 655 ஆகவும் பவுன் ரூ.37 ஆயிரத்து 240 ஆக அதிகாpத்திருந்தது.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 625 ஆகவும், பவுன் ரூ.37 ஆயிரமாகவும் இருந்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.294 ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 352 ம் குறைந்து கிராம் ரூ.4 ஆயிரத்து 331 ஆகவும், பவுனுக்கு ரூ.34 ஆயிரத்து 648 ஆகவும் குறைந்திருந்தது.


மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4 ஆயிரத்து 342 ஆகவும், பவுன் ரூ. 34 ஆயிரத்து 736 ஆகவும் இருந்தது. இந்த ஒரு மாதத்தில் இதன் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 192 ஆகவும், பவுனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்து 536 ஆகவும் குறைந்திருந்தது. மார்ச் மாத இறுதியில் கிராம் ரூ.4 ஆயிரத்து 192 ஆகவும், பவுன் ரூ.33 ஆயிரத்து 536 ஆகவும் இருந்த தங்கத்தின் விலை இந்த ஒரு வாரத்தில் கிராமுக்கு ரூ.172 ம், பவுனுக்கு ரூ.1,376 ம் அதிகரித்துள்ளது.

தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகமும் மிகவும் அதிகம். அதற்கேற்ப தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாகவே உள்ளது. சென்னையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் தங்கத்தின் விலை கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில் மீண்டும் தங்கத்தின் விலை இந்திய சந்தையில் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!