தங்கம் விலை 2வது நாளாக சரிவு; சவரனுக்கு ரூ.568 குறைந்தது

தங்கம் விலை 2வது நாளாக சரிவு; சவரனுக்கு ரூ.568 குறைந்தது
X
உக்ரைன் போரால் கிடுகிடுவென அதிகரித்த தங்கம் விலை, இரண்டாவது நாளாக இன்றும் குறைந்ததுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையே, கடந்த 24ம் தேதி போர் மூண்டது. இரு நாடுகளிடையே சண்டை மூண்ட சில நிமிடங்களில் பங்குச் சந்தைகள் சரிந்தன; சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்தது. அதேபோல், தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

தங்கம் விலை, நேற்று முன்தின நிலவரப்படி, கிராமுக்கு ரூ.232-ம், பவுனுக்கு ரூ.1,856-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 951-க்கும், ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 608-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. அதன்படி, 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1136 குறைந்து ரூ.38,472-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.142 குறைந்து ரூ.4,809 என விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.70 சரிந்து ரூ.70-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.568 குறைந்து ரூ.37,904க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம், ரூ.71 குறைந்து ரூ.4,738-க்கு விற்பனையாகிறது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil