சிலிண்டர் சப்ளையில் மாற்றம் வருகிறதா? மத்திய அரசு பரிசீலனை

சிலிண்டர் சப்ளையில் மாற்றம் வருகிறதா? மத்திய அரசு பரிசீலனை
X

கோப்பு படம்

சமையல் எரிவாயு சிலிண்டர்களை, ரேஷன் கடைகளில் வழங்கும் சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் தங்களது முகவர்கள் மூலம் மேற்கொள்கின்றன. சிலிண்டர் விலை ஏற்றத்தால் சாமானிய மக்கள் பாதித்து வருகின்றனர். தற்போது, மானிய சிலிண்டர் விலையே, ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இந்த சூழலில், சிறிய ரக சமையல் எரிவாயு சிலிண்டர்களை நியாய விலைக்கடைகள் மூலம், சில்லறை விலைக்கு விற்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே, நேற்று நடைபெற்ற மெய்நிகர் ஆலோசனை கூட்டத்தில், இத்தகவலை தெரிவித்துள்ளார். நியாய விலைக்கடைகளின் நிதி சாத்தியக்கூறுகளை மேம்படுத்துவதற்கு, முன்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விற்பனை செய்யும் அரசின் யோசனையை, இக்கூட்டத்தில் பங்கேற்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் வரவேற்றுள்ளனர். இக்கூட்டத்தில், மின்னணு தகவல் தொழில் நுட்பம், நிதி, பொதுச்சேவைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். எனினும் இத்திட்டத்தை எந்த வகையில் எப்போது செயல்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!