முட்டை விலை மேலும் 20 பைசா சரிவு: ஒரு முட்டை விலை ரூ. 4.60

முட்டை விலை மேலும் 20 பைசா சரிவு: ஒரு முட்டை விலை ரூ. 4.60
X
நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 20 பைசா சரிந்தது: ஒரு முட்டையின் விலை ரூ. 4.60 என விற்கப்படுகிறது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.80 ஆக இருந்த முட்டை விலை, 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை 490, பர்வாலா 470, பெங்களூர் 480, டெல்லி 505, ஹைதராபாத் 440, மும்பை 505, மைசூர் 475, விஜயவாடா 470, ஹொஸ்பேட் 440, கொல்கத்தா 540.

கடந்த 6ம் தேதி ரூ.5.05 ஆக இருந்த முட்டை விலை 25 பைசா குறைக்கப்பட்டு ரூ.4.80 ஆனது. தற்போது 2 நாட்களில் மேலும் 20 பைசா குறைந்து ரூ.4.60 ஆனது. 2 நாட்களில் ஒரு முட்டைக்கு ரூ.45 பைசா விலை சரிவால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: தமிழகத்தில் ஊரடங்கு அறிவித்து நேரக்கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததுதான் முட்டை விலை சரிவுக்கு காரணம். ஊரடங்கால் முட்டை தேக்கம் அடையும் என்ற பயத்தில் பண்ணையாளர்கள், விரைவாக முட்டைகளை விற்பனை செய்யமுன்வந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்டு, என்இசிசி நிர்ணயம் செய்யும் விலையை விட, குறைந்த விலைக்கு முட்டை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

தற்போது என்இசிசி விலையில் இருந்து ஒரு முட்டைக்கு 60 பைசா குறைத்தே விற்பனை செய்ய முடிகிறது. இதனால் ஒரு முட்டைக்கு பண்ணையாளர்களுக்கு ரூ.4 மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில் முட்டைக்கோழிப் பண்ணைத்தொழிலில் நாள் ஒன்றுக்கு ரூ.150 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது என்று கூறினார்.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 88 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.75 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!