நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு - ஒரு முட்டை விலை ரூ.4.90

நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு - ஒரு முட்டை விலை ரூ.4.90
X
நாமக்கல் மண்டலத்தில் , முட்டை விலை 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ.4.85 ஆக இருந்த முட்டை விலை, 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை 505, பர்வாலா 527, பெங்களூர் 505, டெல்லி 555, ஹைதராபாத் 475, மும்பை 540, மைசூர் 505, விஜயவாடா 499, ஹொஸ்பேட் 465, கொல்கத்தா 555.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.96 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.80 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!