ஒரு அதிர்ச்சி,ஒரு மகிழ்ச்சி..! சமையல் எரிவாயு உயர்வு, சமையல் எண்ணெய் விலை குறைவு

edible oil price goes down-சமையல் எண்ணெய் (மாதிரி படம்)
edible oil price goes down-இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தே பூர்த்தி செய்யப்படுகிறது. பயன்படுத்தப்படும் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் போன்றவைகளுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை குறைவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்திருப்பதால், சமையல் எண்ணெய் விற்பனை விலையை குறைப்பதற்கு மத்திய அரசு எண்ணெய் தயாரிப்பு நிறுனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி அடுத்த வாரத்தில் இருந்து சமையல் எண்ணெய் விலை ரூ.10 முதல் ரூ.12 வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமையல் கேஸ் விலை ரூ.50உயர்ந்திருப்பது மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பிருப்பது மக்களுக்கு சிறிதே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
edible oil price goes down-கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்ததன் எதிரொலியாக இந்தியாவிலும் விற்பனை விலையில் சமையல் எண்ணெய் விலை அதிகரித்தது. பின்னர் சிறிது சரிந்ததால் ரூ.15 வரை எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைத்தன. தற்போது மேலும் விலை குறைந்துள்ளதால், மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் விலையை குறைக்க வலியுறுத்தியுள்ளது. அந்த விலைகுறைப்பு வரும் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu