கிரிப்டோ கரன்சி என்பது என்ன? அதன் மதிப்பு எப்படியுள்ளது? தமிழில்

கிரிப்டோ கரன்சி என்பது என்ன? அதன் மதிப்பு எப்படியுள்ளது? தமிழில்
X

cryptocurrency news in tamil-கிரிப்டோ கரன்சி (மாதிரி படம்)

cryptocurrency news in tamil-கிரிப்டோ கரன்சி என்பது என்ன? அது எவ்வாறு பயன்படுகிறது? சிறந்த கிரிப்டோ நாணயங்கள் எவை என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது.

cryptocurrency news in tamil-கிரிப்டோகரன்சி என்பது ஒரு நாணயத்தின் டிஜிட்டல் வடிவம். இது, நாணயம் அல்லது நோட்டு போன்ற தொட்டு உணரும் வடிவத்தில் இருக்காது. இது முழுவதும் இணையத்தில் இருக்கும். எந்த சட்டவிதிகளுக்கும் உட்படாமல் இந்த கிரிப்டோ கரன்சி மூலம் வர்த்தகம் நடைபெறுகிறது.

சுருக்கமாக சொன்னால் கிரிப்டோ கரன்சி என்பது டிஜிட்டல் நாணயங்கள். கிரிப்டோ கரன்சிகளை கள்ளத்தனமாக போலியாக உருவாக்க முடியாது. ஒவ்வொரு கிரிப்டோ கரன்சிக்கும் குறிப்பிட்ட மதிப்பு உண்டு. மார்க்கெட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பும் ஏறி இறங்கும்.

அரசாங்கம் அல்லது எந்த ஒரு ஒழுங்குமுறை அமைப்புகளோ இந்த நாணயங்களை உருவாக்கி வழங்கவில்லை. டிஜிட்டல் கரன்சி என்பதால் இணைய மோசடிகள் நடக்கும் வாய்ப்பு உள்ளதாக, இவ்விவகாரத்தை மத்திய ரிசர்வ் வங்கி இந்த பிரச்னையை மீண்டும் இந்த ஆண்டு எழுப்பியுள்ளது.

2018 ஆம் ஆண்டில், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை விஷயத்தில், வங்கிகள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு RBI தடைவிதித்தது. ஆனால், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் ரிசர்வ் வங்கியின் தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது. 'இந்த விஷயத்தில் எந்த ஒரு முடிவெடுப்பதற்கும்' அரசு, ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும்' என் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.

இந்தியா தனக்கென ஒரு கிரிப்டோகரன்சி நாணயத்தை உருவாக்கவும் அதை புழக்கத்தில் விடவும் சில வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி கூறியது. இந்த நாணயத்தை இந்தியாவில் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் அரசு தொலைநோக்குபார்வை கொண்டுள்ளது. ஆகவே அதை நிர்ணயிக்க கால அவகாசம் தேவைப்படும் என்றும் அறிவித்தது.

cryptocurrency news in tamil-எத்தனை இந்தியர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளனர் அல்லது எத்தனை பேர் அதில் வர்த்தகம் செய்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் எதுவும் இந்தியாவிடம் இல்லை. ஆனால் கோடிக்கணக்கான மக்கள் டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்து வருவதாகவும், கொரோனா தொற்று காலத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதாகவும் பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கிரிப்டோ நாணயங்கள்.

2022ம் ஆண்டில் சிறந்த பத்து கிரிப்டோகரன்சிகள் :

1) ஈத்ரியம் :

2022ல் முதலீடு செய்வதற்கான சிறந்த கிரிப்டோ கரன்சிகளில் சிறப்பானதாகும். ஏனெனில் இது நீண்ட காலத்திற்கு மற்ற எந்த முதலீடுகளையும் மிஞ்சக்கூடியதாக இருக்கிறது. 2016 முதல் 2022ம் ஆண்டின் முற்பகுதி வரை இதன் விலை $10 முதல் $3,550 வரை இருந்து 32,000%க்கும் அதிகமாக இருந்தது.

2) ஏப்காயின் :

இது 2022ம் ஆண்டில் முதலீடு செய்வதற்கான சிறந்த கிரிப்டோக்களில் இன்னொரு சிறப்பு டிஜிட்டல் நாணயமாகும். இது 10,000 என்எஃப்டிக்களால் உருவாக்கப்பட்ட தளமாகும். இந்த காயின்களை வாங்கும்போது சிறந்த ஆல்ட் காயின்களையும் வழங்குகிறது. இதன் விலை தொடக்கத்தில் $6.40 ஆக இருந்து பின்னர் சில மணி நேரங்களில் ஒரு டோக்கனுக்கு $42 ஆக உயர்ந்தது.

3) பிட்காயின் :

புதிதாக காயின் வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வு. பிட்காயின், 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் $27,000 - $34,000 ஆக இதன் மதிப்பு இருந்தது. ஆனால் இதன் மதிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் $74,000 க்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4) பைனான்ஸ் காயின் :

பைனான்ஸ் காயின், வர்த்தகம் மற்றும் சில வாடிக்கையாளர்களுக்கான உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக இருக்கிறது. இந்த கிரிப்டோ கரன்சி பரிமாற்றத்தின் போது வாடிக்கையாளர்கள் குறைந்த கமிஷன்களை செலுத்தி பயன்பெறும் வாய்ப்பு உள்ளது.பிற கிரிப்டோ நாணயங்களான ஈத்ரியம், பிட்காயின் போன்றவற்றையும் இதில் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்புகளும் உள்ளன.

5) யூனிஸ்வேப் :

மூன்றாம் தரப்பு இல்லாமல் நேரடியாக இந்த டிஜிட்டல் நாணயங்களை வாங்கவும், விற்கவும் அனுமதிக்கும் ஒரு சிறந்த தளமாக இது விளங்குகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதன் மதிப்பு $5.70ஐ விஞ்சியது. இந்த நாணயத்தின் ஒரு டோக்கனுக்கு $18ஐ எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6) சொலனா :

இது பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அனுமதித்து நிதி தீர்வுகளை வழங்குகிறது. கடந்த ஆண்டில் வேகமாக வளர்ந்த கிரிப்டோ நாணயங்களில் இதுவும் ஒன்று. 2022ம் ஆண்டின் இறுதிக்குள் 440% அதிகரித்து ஒரு டோக்கனுக்கு $450க்கு மேல் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

7) டாகிகாயின் :

கடந்த ஆண்டு மிகவும் பிரபலமாக வாங்கப்பட்ட கிரிப்டோ நாணயங்களில் இதுவும் ஒன்று. இந்த நாணயத்தை பற்றி அடிக்கடி எலன் மஸ்க் ட்வீட் செய்துக்கொண்டிருப்பார். இது ஐந்து மாதங்களில் 19.000% ஐ எட்டியது. இது லாபம் தரும் முதலீடாக பார்க்கப்படுகிறது.

8) கார்டானோ :

இந்த கிரிப்டோ நாணயம் ஒரு பிரபலமானதாகும். வேகமாக வளர்ந்து வரும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மேலும் இது பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் கூறப்படுகிறது. இந்த கிரிப்டோ நாணயங்கள் கணிசமாக உயர்ந்து அதிக லாபத்தை தரக்கூடியது என்றும் கூறுகிறார்கள்.

9) டெர்ரா :

இது முதலில் ஸ்டேபிள்காயின்களை மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்ப நாணயங்கள் ஆகும்., இது அமெரிக்க டாலர் மதிப்பிக்கு இணையாக இதன் மதிப்பை பராமரிக்கிறது. 2022ம் ஆண்டில் டெர்ரா நாணயம் 300% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10) அவலாஞ்சி :

அவலாஞ்சியில் முதலீடு செய்வது அதிக லாபத்தை தரும் என்பது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை. இதில் முதலீடு செய்த பலரும் அதிகப்படியான லாபத்தை ஈட்டியுள்ளனர். ஜூலை 2020 முதல் ஏப்ரல் 2022 வரை இந்த நாணயத்தின் விலை $4.13 லிருந்து $98.58 ஆக கிட்டத்தட்ட 2,200%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story