மினிமம் பேலன்ஸ் ரூ.15ஆயிரம் :இது ஆக்ஸிஸ் அதிரடி

மினிமம் பேலன்ஸ் ரூ.15ஆயிரம் :இது ஆக்ஸிஸ் அதிரடி
X

ஆக்சிஸ் பேங்க் அலுவலகம் (மாதிரி படம்)

ஆக்சிஸ் பேங்க் குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.10ஆயிரம் என்பதை ரூ.15ஆயிரம் என மாற்றி அமைத்துள்ளது.

முன்னணி தனியார் பேங்குகளில் ஒன்றான ஆக்ஸிஸ் மினிமம் பேலன்ஸ்-ஐ அதிரடியாக உயர்த்தியுள்ளது. பேங்க் வாடிக்கையாளார்கள் தங்கள் அக்கவுண்டில் வைத்திருக்கும் குறைந்த பட்ச இருப்புத் தொகையை ரூ.10,000த்தில் இருந்து ரூ. 15,000 -ஆக அதிகரித்துள்ளது.

இதே பிரைம் மற்றும் லிபர்டி சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் என்பது ரூ.15,000 -ஐ ரூ. 25,000 ஆக அதிகரித்துள்ளது.இருப்பினும் இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் மினிமம் பேலன்ஸ் தொகை இல்லாமால் இருந்தால் அதற்கு விதிக்கப்படும் குறைந்தபட்ச கட்டணம் என்பது 150 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, அதிகபட்ச கட்டணம் என்பது 600 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 4 முறை கட்டணமே இல்லாமல் பணம் எடுத்துக் கொள்ள வங்கி அனுமதி அளித்துள்ளது. 4முறைக்கு மேல் எடுக்கும்போது ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 10 ரூபாய் வசூலிக்கப்படும். அதிகபட்சம் 150 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இது முன்னர் 5 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதும் அதிகபட்சம் 150 ரூபாய் வரையிலும் 4 இலவச பரிவர்த்தனைகளும் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!