இனி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டோம்" அமேசான் அதிரடி அறிவிப்பு..!

அமேசான் நிறுவனம் (கோப்பு படம்)
கடந்த மே மாதம் 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்றும், வங்கியில் ஒப்படைக்குமாறும் அறிவிப்பை வெளியிட்டது. மத்திய அரசு நிர்ணயித்த கால அவகாசம் வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், இணைய வழி பொருட்கள் விநியோக நிறுவனமான அமேசான் அதிரடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ”அமேசான் தற்போது வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொண்டு வருகிறது.
இருப்பினும், வரும் 19-ம் தேதிக்கு பிறகு அமேசான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பணம் கொடுத்து பொருட்களை டெலிவரி பெறும் வாடிக்கையாளர்களிடம் ஏற்றுக்கொள்ளாது” என்று அறிவித்துள்ளது.
இந்த முடிவை சிலர் அதிர்ச்சியாகப் பார்த்தாலும் நிறுவனம் எடுத்துள்ள முடிவை சற்று கூர்ந்து கவனித்தால் நிறுவனம் சரியாகவே எடுத்துள்ளது என்பது புரியும். 19ம் தேதிக்குப்பின்னர் அந்த மாதம் முடிவதற்கு 30ம் தேதி வரை 11 நாட்கள் மட்டுமே உள்ளன. அந்த இடைவெளியில் 19ம் தேதி வரை நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிவிடமுடியும். அதற்குப்பின் வாங்கினால் பல நூறு கோடி ரூபாய்களை மாற்றுவது கடினம் என்று நிறுவனம் உணர்ந்து 19ம் தேதியுடன் முடித்துக்கொண்டுள்ளது.
அதனால் வாடிக்கையாளர்கள் அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்கினால் பணம் செலுத்த எத்தனையோ எளிதான வழிகள் இருப்பதால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu