இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கணவர் பிலிப் காலமானார்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கணவர் பிலிப் காலமானார்
X

இங்கிலாந்து ராணி எலிசபெத் கணவர் பிலிப் (லைவ் படம்) 

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் காலமானார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கணவர் பிலிப் காலமானார். அவருக்கு வயது 99.

டியூக் ஆஃப் எடின்பர்க் என்று செல்லமாக அழைக்கப்பட்ட பிலிப், கிட்டத்தட்ட 70ஆண்டு காலம் எலிசபெத் ராணியின் வாழ்க்கையோடு பயணித்தவர். அந்த காலகட்டத்தில் பல இக்கட்டான சூழல்கள் நிலவிய போது கூட நற்பெயர் பெற்றவர். அரச குடும்பத்தில் பிரபலமாக அறியப்பட்டவரும் இவரே. இன்று வெள்ளிக்கிழமை காலை பக்கிங்காம் அரண்மனையில் அவரது உயிர் அமைதியாக பிரிந்தது.


ராணியின் வாழ்க்கையில் பயணித்த அவரது நேசத்துக்குரிய கணவர் பிலிப் மரணத்தை எலிசெபெத் ராணி அறிவித்தபோது இங்கிலாந்து நாடே கண்ணீர்விட்டது.

மேற்கொள்ளவேண்டிய மற்ற நடவடிக்கைகள் குறித்து பக்கிங்காம் அரண்மனை அறிவிப்புகளை வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவை அறிந்த உலக தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் அடக்கம் குறித்த தகவல்கள் இனிமேல்தான் வெளியிடப்படும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!