கோழைகளை நாம் ஒரு போதும் பொருட்படுத்தியது இல்லை.. கமல் காட்டம்!
கோழைகளை பற்றி நாம் ஒரு போதும் பொருட்படுத்தியது இல்லை ...கமல் காட்டம்!
தேவைக்காக பயன்படுத்திக்கொண்டு தோல்வி என்றால் விடுங்கடா சாமி என ஓடும் கோழைகளை பற்றி நாம் ஒரு போதும் பொருட்படுத்தியது இல்லை- இதை நான் சொல்லவில்லை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்தாராம் கமல்ஹாசன் அதில் கட்சியின் கட்டமைப்புகளில் உடனடியாக பல மாற்றங்கள் வரும் என்றும் இந்த மாற்றங்கள் கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் அக்கட்சியின் இருந்து விலகினார். கட்சி வெளிப்படைத்தன்மை இல்லாமல், ஜனநாயக விரோத முறையில் செயல்பட்டு வருவதாகவும், கமல் ஒரு சில நபர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்றும் மகேந்திரம் குற்றம் சாட்டினார். அதேபோல், மக்கள் நீதி மய்யத்தில் துணை தலைவர் பொன்ராஜ், பொதுச்செயலாளர்கள் சந்தோஷ் பாபு. சி.கே.குமரவேல், மவுரியா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் மக்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர். தொடர்ச்சியாக, நிர்வாகிகள் ராஜினாமா குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தனர். அவர்களை களையெடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரது குரலாக இருந்தது. அப்படி களையெடுக்க வேண்டியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் மகேந்திரன் என்று தெரிவிச்சிருக்காரு.
முகவரி கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக் கொள்ள துணிந்தவர் மகேந்திரன் என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், கட்சிக்காக உழைக்க காத்திருந்த நல்லவர்கள் பலர் தலையெடுக்க அவர் விடவில்லை என்றும் குற்றமும் சாட்டியுள்ளார். எப்படியும் நீக்கி விடுவேன் என்ற காரணத்தால் அவரே விலகி விட்டார் என்றும் கமல்ஹாசன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu