சண்டே சினிமா ஸ்பெஷல் அப்டேட்...

சண்டே சினிமா ஸ்பெஷல் அப்டேட்...
X
கோலிவுட்டுக்கு டாட்டா...

நம்ம சூப்பர்ஸ்டாரு இருக்காருல்ல அவரு இப்போதைக்கு நடிச்சிக்கிட்டிருக்கும் அண்ணாத்தே படத்துக்கு அப்புறம் யாரிடமும் கமிட் ஆகலையாம். காரணம் தெரியல ஆனா அதே சமயம் தன்னுமைய மருமகன் தனுஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து விட்டு அப்பால கோலிவுட்டுக்கு டாட்டா காட்ட முடிவு எடுத்து இருப்பதாக நம்ம #இன்ஸ்டாநியுஸ்க்கு ஒரு தகவல் வந்துருக்கு..

இளம்புயல் தனுஷூம் அமெரிக்காவில் ஹாலிவுட் படத்தில் நடித்துக் கொண்டே கிடைத்த வாய்ப்பில் தன் மாமாவிடம் கடைசி படக் கதையை ஃபிரேம் பை ஃபிரேமா செதுக்கி.. செதுக்கி... சொல்லிக்கொண்டிருக்கிறாராம்..

முழு வடிவமமாகி விட்ட அந்தக் கதைக் கேட்பதற்காக வழக்கம் போல ரஜினி அமெரிக்கா போகிறாராம் என்று தகவல் சொன்ன பட்சி பறந்துபோனது..

திரும்பி வந்து சொன்ன சேதி இது தான்..

உங்களுக்கு ஒரு சேதி தெரியுமா? அண்ணாத்தே படம் 'முள்ளும் மலரும்' படத்தின் 2021 வெர்ஷன் அப்படின்னு ஒரு ரகசிய சேதி வருது.

ஆமாமுங் அண்ணன்-தங்கை பாசம் பற்றிய கதைதானாம் இதுவும்..

தலைவரின் வழக்கமான ஸ்டைல் போல தங்கையின் மீது அதீத பாசம் கொண்டவராக இருக்கிறாராம் 'அண்ணாத்த'. அந்தத் தங்கையோ தமிழ் சினிமாவுக்கே உள்ள வழக்கம் போல தன் குடும்பத்தினரிடம் சொல்லாமல் காதலனுடன் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டுப் போய் விடுகிறாராம்

இதனால் ஏற்படும் குடும்ப உறவுச் சிக்கல்களை நம்ம அண்ணாத்த எப்படி தீர்த்து வைத்து தனது பாசமலர் தங்கையை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இந்த 'அண்ணாத்த' படத்தின் கதையாம் அப்படின்னு பட்சி சொல்லுது.

ஆனாலும் இயக்குநர் சிவாவின் முந்தைய படமான 'விஸ்வாசம்' படத்தின் வெற்றிக்குக் காரணமே அதில் இருந்த அப்பா-மகள் பாசக் கதைதானாம்.

இதிலும் அதேபோல் அண்ணன்-தங்கை பாசமலர் கதையை இயக்குநர் சிவா உருக்கியிருக்கிறார் அப்படின்னும் பேசிக்கிறாய்ங்க..

அது மட்டுமில்ல இந் படத்துலு இமான்அண்ணாச்சி இசையில் அண்ணன்-தங்கை பாசத்தை வைத்து ஒரு பாடலும்ரொம்ப பிரமாதமா வந்திருக்கிறதாம். விருது உறுதி என்கிறார்கள் பாடலைக் கேட்டவய்ங்க நான் கேட்கல.

ஆனது ஆகட்டும் வரட்டும் முடிவு செய்யலாம் இது தானே நம்ம முடிவு.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!