வரும் 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார் மு.க. ஸ்டாலின்

வரும் 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார் மு.க. ஸ்டாலின்
X
சட்டசபைத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, தமிழக முதல்வராக, வரும் 7 ம் தேதி மு.க. ஸ்டாலின் பதவி ஏற்கிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் வரும் ௭ம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்கிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

சட்டமன்றத்தில், பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி திமுக மட்டுமே 125- தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து, திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், வரும் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்கிறார். கொரோனா தொற்று பரவல் காரணமாக, பதவி ஏற்பு விழாவை எளிமையாக நடத்த ஸ்டாலின் திட்டமுள்ளார். அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

முன்னதாக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம், நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்